/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'கித்துார் ராணியின் பிறந்த நாளை கொண்டாட அரசு தயார்'
/
'கித்துார் ராணியின் பிறந்த நாளை கொண்டாட அரசு தயார்'
'கித்துார் ராணியின் பிறந்த நாளை கொண்டாட அரசு தயார்'
'கித்துார் ராணியின் பிறந்த நாளை கொண்டாட அரசு தயார்'
ADDED : ஆக 08, 2025 04:09 AM

பெங்களூரு: ''கித்துாரில் அனைத்து சமூக மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டது. துணிச்சலான பெண் கித்துார் ராணியின் பிறந்த நாளை கொண்டாட, மாநில அரசு தயாராகிவிட்டது,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தோட்டக்கலைத் துறை சார்பில் 218வது மலர் மற்றும் பழங்கள் கண்காட்சியை, முதல்வர் சித்தராமையா நேற்று துவக்கி வைத்தார். அவர் பேசியதாவது:
ஆங்கிலேயர் காலத்தில் சுதந்திரத்துக்காக போராடியவர்களை நினைவுகூர்வது அவசியம். சுதந்திரத்துக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய கித்துார் ராணி சென்னம்மா, அவரது வலதுகரமாக செயல்பட்ட கிராந்தி வீர சங்கொல்லி ராயண்ணாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தோட்டக்கலைத் துறை, மலர் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. ஆங்கிலேயருக்கு எதிரான முதல் போரில் கித்துார் ராணி வெற்றி பெற்றார்.
அடுத்து நடந்த இரண்டாவது போராட்டத்தில் தோல்வி அடைந்தார். சங்கொல்லி ராயண்ணா, ஆக., 15ல் பிறந்தவர். ஆங்கிலேயர்களுடனான போரில் தோல்வி அடைந்ததால், ஜனவரி 26ல் துாக்கிலிடப்பட்டார்.
கித்துார் பகுதியில் பின்தங்கிய வகுப்பினர் அதிகளவில் வசித்து வந்தனர். அனைத்து ஜாதியினருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டன. அனைத்து நிர்வாகத்திலும் மதச்சார்பின்மை பின்பற்றப்பட்டது.
துணிச்சலான கித்துார் ராணி சென்னம்மாவின் பிறந்த நாளை கொண்டாட, அரசு துவங்கி விட்டது.
சங்கொல்லி ராயண்ணா பெயரில் ஆணையம் உருவாக்குவதன் மூலம், நந்திகட்டாவில் உள்ள சங்கொல்லி கிராமம் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.