/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.2,082 கோடி அரசு விடுவிப்பு; லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்
/
ரூ.2,082 கோடி அரசு விடுவிப்பு; லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்
ரூ.2,082 கோடி அரசு விடுவிப்பு; லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்
ரூ.2,082 கோடி அரசு விடுவிப்பு; லாரிகள் வேலை நிறுத்தம் வாபஸ்
ADDED : ஜூலை 09, 2025 01:02 AM
பெங்களூரு : ரேஷன் கடைகளுக்கு உணவு பொருட்கள் எடுத்துச் செல்லும், லாரி உரிமையாளர்களுக்கு வழங்க 2,082 கோடி ரூபாயை அரசு விடுவித்துள்ளது. இதனால் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.
கர்நாடகாவில் உள்ள 20,481 ரேஷன் கடைகளுக்கு, அரிசி, கேழ்வரகு, சோளம் என 4.50 லட்சம் டன் உணவுப் பொருட்கள், 4,500 லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகின்றன. கடந்த பிப்ரவரி முதல் தற்போது வரை ஆறு மாதங்களாக, உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் லாரிகளுக்கு, வாடகையை அரசு கொடுக்கவில்லை.
மொத்தம் 260 கோடி ரூபாய் அரசு பாக்கி வைத்தது. பல முறை கேட்டும் பணம் ஒதுக்காததால், அதிருப்தி அடைந்த லாரி உரிமையாளர்கள், உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் லாரிகளை நிறுத்தினர். 'லாரி உரிமையாளர்கள் வங்கிக்கணக்குக்கு பணம் வந்தால் தான், இனி லாரிகளை இயக்குவோம்' என, கர்நாடக லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகப்பா அறிவித்தார். நேற்று முன்தினம் காலையில் இருந்து லாரிகள் வேலை நிறுத்தம் துவங்கின. இதையடுத்து, உணவுத் துறை அதிகாரிகள் நேற்று காலையில் இருந்தே, தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
லாரி உரிமையாளர்களுக்கு வழங்க, பணம் விடுவிக்கும்படி நிதித் துறையிடம் கோரிக்கை வைத்தனர்.
இதை ஏற்றுக்கொண்ட நிதி துறை 2,082 கோடி ரூபாய் விடுவித்து உத்தரவிட்டது. இந்த பணம் லாரி உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கும், பிற செலவுகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது. அரசு பணம் விடுவித்திருப்பதால், லாரிகள் வேலை நிறுத்தமும் வாபஸ் பெறப்பட்டது.