/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை ஆண்டு விழா ; லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்த மகளிர்

ADDED : ஜூலை 09, 2025 01:02 AM

தொம்மலுார் : ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை ஆண்டு விழாவில் நேற்று பெண்கள் சஹஸ்ரநாம பாராயணம் செய்தனர்.
பெங்களூரு தொம்மலுார் கிருஷ்ணா ரெட்டி லே - அவுட்டில் உள்ள ஸ்ரீசூர்ய நாராயண சுவாமி கோவில் கல்யாண மண்டபத்தில், ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளையின் 44ம் ஆண்டு விழா, வேத அறிஞர்கள் கவுரவிப்பு மஹோத்சவம், ஸ்ரீசாதுராம் சுவாமிகளின் 25ம் ஆண்டு ஆராதனை இரண்டாம் பாகம் விழா, நேற்று இரண்டாம் நாளாக நடந்தது.
காலையில் ஸ்ரீசூக்த ஹோமம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து பக்தவச்சலம் பாகவதர் பாகவத மூல பாராயணம் நடத்தினார்.
பின், சென்னை, திருவண்ணாமலை, கும்பகோணம், கர்நாடகாவின் சிர்சி, ஷிவமொக்கா உட்பட பல பகுதிகளில் இருந்து வந்திருந்த 200 வேத அறிஞர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
மாலையில், பெண்கள் லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்தனர். தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பகவத் பிரசாதம் வழங்கப்பட்டது.
இரவில் ஸ்ரீதுஷ்யந்த் ஸ்ரீதரின் ஸ்ரீமன் நாராயணீயம் உபன்யாசம் நடந்தது. நேற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பலர் வந்திருந்தனர்.