sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஊழல் வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு சிறை: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு

/

ஊழல் வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு சிறை: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு

ஊழல் வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு சிறை: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு

ஊழல் வழக்குகளில் ஷேக் ஹசீனாவுக்கு சிறை: வங்கதேச நீதிமன்றம் தீர்ப்பு

3


ADDED : நவ 27, 2025 03:44 PM

Google News

3

ADDED : நவ 27, 2025 03:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டாக்கா: அரசு திட்டங்களுக்கு நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட 3 வழக்குகளில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 21 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அந்நாட்டில் புதிய அரசு அமைந்த உடன் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக இனப்படுகொலை ஊழல் செய்தது, உட்பட ஏராளமான வழக்கு பதிவு செய்யப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதாக கூறி தொடர்ந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் வங்கதேசத்தில் புர்பச்சல் புதிய நகர் திட்டத்தில், அவருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் விதிமுறைகளை மீறி நிலம் ஒதுக்கப்பட்டதாகவும், அதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த டாக்கா சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது அப்துல்லா அல் மமும், 3 வழக்குகளிலும் ஷேக் ஹசீனா குற்றவாளி என அறிவித்தார். மேலும் அவருக்கு ஒவ்வொரு வழக்கிலும் தலா 7 ஆண்டுகள் என மொத்தம் 21 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். அவரின் மகன் சஜீப் வாகீத்துக்கும், மகள் சயிமா வாஜீத்துக்கும் தலா 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us