இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு
ADDED : நவ 27, 2025 01:27 PM

நமது நிருபர்
இந்தோனேசியாவில் கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டரில் 6.4 ஆக பதிவாகி உள்ளது. இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவையொட்டிய கடல் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் அளவில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சினாபாங்கிலிருந்து 58 கி.மீ வடமேற்கு தொலைவில் 27 கி.மீ., ஆழத்தில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்தியப் பெருங்கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
26 பேர் பலி
ஏற்கனவே, இலங்கையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மொத்தம் 150க்கு மேற்பட்ட இடங்களில், நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 26 பேர் உயிரிழந்தனர்.

