தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ துபாயில் சிக்கிய காங்., - எம்.எல்.ஏ.,வை மீட்க அரசு நடவடிக்கை

 துபாயில் சிக்கிய காங்., - எம்.எல்.ஏ.,வை மீட்க அரசு நடவடிக்கை

 துபாயில் சிக்கிய காங்., - எம்.எல்.ஏ.,வை மீட்க அரசு நடவடிக்கை


ADDED : மார் 02, 2026 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 05:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: போரால் பாதிக்கப்பட்டுள்ள துபாயில் சிக்கி தவிக்கும், பல்லாரி நகர காங்கிரஸ் எம்.எல்.ஏ., பரத் ரெட்டி உள்ளிட்ட கன்னடர்களை மீட்க, கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஈரான் - அமெரிக்கா இடையில் நிலவும் போர் எதிரொலியாக துபாய் விமான நிலையம் மூடப்பட்டு உள்ளது. இதனால், அங்கிருந்து விமானங்கள் மூலம் பல நாடுகளுக்கு செல்ல இருந்தவர்கள், விமான நிலையத்தில் சிக்கி தவிக்கின்றனர்.

கர்நாடகாவில் இருந்து துபாய்க்கும், துபாய் வழியாக மற்ற நாடுகளுக்கும் சுற்றுலா, தொழில் விஷயமாக சென்றவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பல்லாரி நகர காங்கிரஸ் எம்.எல்.ஏ., பரத் ரெட்டி, ம.ஜ.த., - எம்.எல்.சி., போஜேகவுடாவும் அங்கு சிக்கி இருக்கின்றனர்.

இந்நிலையில், பல்லாரி ரூரல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாகேந்திரா, முதல்வர் சித்தராமையாவிடம் நேற்று மொபைல் போனில் பேசினார். பல்லாரி ரூரல், சிறுகுப்பாவில் இருந்து துபாய்க்கு சுற்றுலா சென்ற 50 பேரும், பல்லாரி நகர காங்கிரஸ் எம்.எல்.ஏ., பரத் ரெட்டியும் துபாயில் சிக்கி உள்ளனர்.

அவர்களை பத்திரமாக மீட்டு வர நடவடிக்கை எடுக்க நீங்கள் உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

துபாய் உள்ளிட்ட நாடுகளில் சிக்கி தவிக்கும் கன்னடர்கள், தங்களை பத்திரமாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். துபாயில் சிக்கி உள்ள கன்னடர்கள் சிலருடன் மொபைல் போனில் சித்தராமையா வீடியோ காலில் பேசினார். 'எதற்கும் பயப்பட வேண்டாம். உங்களை மீட்டு வர அரசு நடவடிக்கை எடுக்கும்' என்று தைரியம் அளித் தார்.

பின், அவர் கூறுகையில், ''துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் கன்னடர்களை பத்திரமாக மீட்டு வரவும், வெளியுறவு துறையுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும், தலைமை செயலர் ஷாலினிக்கு உத்தரவிட்டு உள்ளேன்.

மத்திய கிழக்கு நாடுகளில் கன்னடர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்து இருப்பது, சற்று நிம்மதி அளிக்கிறது. யாரும் பீதி அடைய வேண்டாம்,'' என்றார்.

அரசு சார்பில் அவசர எண்கள் அறிவிக்கப்படாத நிலையில், சில மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அவசர எண்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

துபாயில் சிக்கி தவிக்கும் பல்லாரியை சேர்ந்த 50 பேருக்கு அங்கு வசிக்கும் நஜீப் என்பவர், உதவிகளை செய்ய முன்வந்து உள்ளார். இவர், எம்.எல்.ஏ., நாகேந்திராவின் நண்பர் ஆவார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us