'பெலகாவியை தகவல் தொழில்நுட்ப நகரமாக மாற்ற அரசு நடவடிக்கை'
'பெலகாவியை தகவல் தொழில்நுட்ப நகரமாக மாற்ற அரசு நடவடிக்கை'
ADDED : மார் 18, 2026 06:18 AM

பெங்களூரு: பெலகாவியை தகவல் தொழில்நுட்ப நகரமாக மாற்ற, அரசு நடவடிக்கை எடுத்து உள்ளதாக, அமைச்சர் பிரியங்க் கார்கே கூறினார்.
சட்டசபையில், பெலகாவி தெற்கு பா.ஜ., உறுப்பினர் அபய் பாட்டீல் எழுப்பிய கேள்விக்கு, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே அளித்த பதில்:
பெலகாவியை வளர்ச்சி நிறைந்த பகுதியாக, தகவல் தொழில்நுட்ப நகரமாக மாற்ற வேண்டும் என, அபய் பாட்டீல் கேட்டுள்ளார். இதற்கான நடவடிக்கையை அரசு ஏற்கனவே எடுத்து உள்ளது. அங்கு தகவல் தொழில்நுட்ப நகரம் அமைப்பதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
பெலகாவியில் தகவல் தொழில்நுட்ப நகரம் அமைக்க, பாதுகாப்பு துறைக்கு சொந்தமான நிலத்தை ஒதுக்கும்படி, 2021ம் ஆண்டு ஜனவரி 8 ம் தேதி, மத்திய பாதுகாப்பு அமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால், மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.
தற்போது திலக்வாடியில் உள்ள கலாமந்திருக்கு சொந்தமான இடத்தில், உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நகரம் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
