தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஆறு மாதத்திற்கு வேலை நிறுத்தம் கூடாது பஸ் ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை

 ஆறு மாதத்திற்கு வேலை நிறுத்தம் கூடாது பஸ் ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை

 ஆறு மாதத்திற்கு வேலை நிறுத்தம் கூடாது பஸ் ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை


ADDED : ஜன 02, 2026 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2026 06:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெலகாவி: மாநில அரசு ஏற்கனவே அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால், 'ஜனவரி முதல் வாரத்தில் ஒரு பஸ் கூட ஓடாது' என்று, அனைத்து கர்நாடக சாலை போக்குவரத்து ஊழியர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், 'அடுத்த ஆறு மாதங்களுக்கு போராட்டம், வேலை நிறுத்தம் நடத்தக்கூடாது' என, எச்சரித்து அரசு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

கர்நாடகாவில், பி.எம்.டி.சி., எனும் பெங்களூரு மெட்ரோபாலிடன் போக்குவரத்து கழகம், கே.எஸ்.ஆர்.டி.சி., எனும் மாநில சாலை போக்குவரத்து கழகம், என்.டபிள்யூ.கே.எஸ்.ஆர்.டி.சி., என்ற, வடகர்நாடகா சாலை போக்குவரத்து கழகம், கே.கே.ஆர்.டி.சி., என்ற, கல்யாண் கர்நாடகா போக்குவரத்து கழகம் இயங்கி வருகிறது. இவற்றில், 1.15 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கோரிக்கை என்ன? கடந்த, 2020 முதல் 2023 வரை, 38 மாதங்களாக நிலு வையில் உள்ள ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும்,

போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரித்து சம ஊதியம் வழங்க வேண்டும், போக்குவரத்து கழகங்களில் தனியார்மயமாக்கல், தொழிலாளர்களை துன்புறுத்தலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

அனைத்து ஊழியர்களுக்கும் பணமில்லா மருத்துவ சிகிச்சை வசதி ஏற்படுத்திய தர வேண்டும், ஊழியர்களுக்கு, விடுமுறை வழங்க வேண்டும்.

புதிய ஊதிய வி திதத்தை, 2024 ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும், தொழிலாளர்களுக்கான உணவக வசதியை மேம்படுத்த வேண்டும், 2020 மற்றும் 2021 வேலை நிறுத்ததின் போது, தொழிலாளர்கள் மீது தொடரப்பட்ட அனைத்து சட்ட வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும்.

மின்சார பஸ்களுக்கு கழகங்களின் ஓட்டுநர்களை நியமிக்க வேண்டும், மின்சார பஸ்கள் பராமரிப்பை தனியார் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைப்பதை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை, போக்குவரத்து ஊழியர்கள் முன்வைத்திருந்தனர்.

இது தொடர்பாக முதல்வருடன் நடந்த ஆலோசனை கூட்டமும் தோல்வியில் முடிந்தது.

எஸ்மா சட்டம் அதனால், பஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க, மாநில அரசு, 'எஸ்மா' சட்டத்தை அமல்படுத்தியது. இதையடுத்து டிச., 31ம் தேதி வரை அரசு ஊழியர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.

மாநில அரசு பிறப்பித்த எஸ்மா சட்டம், கடந்த, 31ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, அனைத்து கர்நாடக சாலை போக்குவரத்து ஊழியர்கள் கூட்டமைப்பினர் கூடி ஆலோசனை செய்தனர்.

அப்போது, 'அரசு அளித்த வாக்குறுதிப்படி, நிலுவையில் உள்ள, 38 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். இல்லை என்றால், ஜனவரி முதல் வாரத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம். டிப்போவில் இருந்து ஒரு பஸ் கூட வெளியே வராது' என்று எச்சரித்திருந்தனர்.

இந்நி லையில், போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு, மாநில அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், 'அடுத்த ஆறு மாதங்களுக்கு போக்குவரத்து ஊழியர்கள் எந்த போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது. மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், எஸ்மா சட்டம் அமல்படுத்தப்படும். இந்த உத்தரவு நகல், அனைத்து போக்குவரத்து ஊழியர்கள் சங்கத்திற்கும் அனுப்பப்பட்டு உள்ளது' என்று எச்சரித்துள்ளது.

மாநில அரசின் இந்த உத்தரவால், ஊழியர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விரைவில் ஆலோசிக்க உள்ளதாக, தகவல்கள் கூறுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us