/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
32 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்
/
32 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்
ADDED : செப் 16, 2025 05:19 AM

பெங்களூரு: கர்நாடகா சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
சமீபத்தில் நடந்த மழைக்கால கூட்டத்தில், சட்டசபை மற்றும் மேல்சபையில் 39 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இவற்றில் 32 மசோதாக்களுக்கு, கவர்னர் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளார்.
இந்த மசோதாக்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன. ஒரே நாளில் 15 மசோதாக்கள், அரசிதழில் வெளியிட்டது பெரிய சாதனையாகும்.
இரண்டு மசோதாக்கள், இணை கமிட்டி ஆய்வுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் சட்டங்களுக்கு, மாநில அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளதால், மாநில அரசின் வேண்டுகோளின்படி, மூன்று மசோதாக்களை ஜனாதிபதி பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
மேலும் ஒரு மசோதா கவர்னரின் கையெழுத்திடுவது பாக்கியுள்ளது. ஒரு மசோதா கவர்னருக்கு அனுப்பப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.