உள்ளாட்சி தேர்தல்களில் இனி ஓட்டுச்சீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்
உள்ளாட்சி தேர்தல்களில் இனி ஓட்டுச்சீட்டு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார் கவர்னர்
ADDED : ஏப் 17, 2026 05:04 AM
பெங்களூரு: உள்ளாட்சி தேர்தல்களில், ஓட்டுப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக, ஓட்டுச்சீட்டுகளை பயன்படுத்த அனுமதிக்கும், கர்நாடக கிராம சுயராஜ்ஜியம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் (திருத்த) மசோதாவுக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புத ல் அளித்ததை அடுத்து, மாநில அரசு சட்டமாக அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது.
ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து, சந்தேகங்களை வெளிப்படுத்தி வரும் காங்கிரஸ் கட்சி, ஓட்டு திருட்டுக்கு எதிராக போராடி வருகிறது. அதனால், உள்ளாட்சி தேர்தல்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக, ஓட்டுச்சீட்டுகள், ஓட்டு பெட்டிகளை பயன் படுத்த முதல்வர் சித்தராமையா அரசு முடிவு செய்திருந்தது.
இது தொடர்பாக, கடந்த மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது, உள்ளாட்சி தேர்தல்களில் ஓட்டுச்சீட்டு பயன்படுத்த அனுமதிக்கும், கர்நாடக கிராம சுயராஜ்ஜியம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் (திருத்த) மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.
இதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இந்த மசோதாவுடன், மேலும், 10 மசோதாக்கள் சபையில் தாக்கல் செய்யப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில், 10 மசோ தாக்களுக்கு கையெழுத்திட்ட கவர்னர், ஓட்டுச்சீட்டு மசோதாவுக்கு கையெழுத்திடவில்லை. இந்நிலையில், இந்த மசோதாவுக்கு கவர்னர் கையெழுத்திட்டு, அரசுக்கு அனு ப்பி உள்ளார்.
அரசும் மசோதாவை சட்டமாக அரசு அறிவித்து உள்ளது. இனி கிராம பஞ்சாயத்து, தாலுகா பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்து, நகர்ப்புற நகராட்சிகள் உட்பட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள், ஓட்டுப்பதி இயந்திரங்களுக்கு பதிலாக, ஓட்டுச்சீட்டுகளில் நடத்தப்படும். வாக்காளர்களை ஒடுக்குபவர்கள், அச்சுறுத்துபவர்கள், அவர்கள் மீது அதிகாரத்தை பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
