sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதாவுக்கு கவர்னர் தடை: பரமேஸ்வர் குற்றச்சாட்டு

 வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதாவுக்கு கவர்னர் தடை: பரமேஸ்வர் குற்றச்சாட்டு

 வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதாவுக்கு கவர்னர் தடை: பரமேஸ்வர் குற்றச்சாட்டு


ADDED : பிப் 03, 2026 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 06:07 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதா அமல்படுத்துவதை தடுக்க கவர்னர் தாவர்ச்ந்த் கெலாட் முயற்சிக்கிறார்,'' என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் குற்றம் சாட்டியுள்ளார்.

சிலர், மேடையில் பேசும் போது உணர்ச்சியை துாண்டும் வகையில் பேசுவதால், கலவரம் ஏற்படுகிறது. இதை தடுக்கும் நோக்கில், கர்நாடக அரசு 'வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதா'வை வகுத்தது.

இம்மசோதா கடந்த 2025 டிசம்பரில் நடந்த சட்டபை, மேல்சபை இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவில் கையெழுத்திட கவர்னர் தாவர்சந்த் கெலாட் மறுப்பு தெரிவித்து உள்ளார். மசோதாவை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கும் அனுப்பிவிட்டார்.

இதற்கு மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. கவர்னர், மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் அரசு கூறுகிறது.

இது குறித்து, பெங்களூரில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அளித்த பேட்டி:

பொது வெளியில் தனிப்பட்ட ஒருவரை தாக்கி பேசுவது, குறிப்பிட்ட சமுதாயங்களை குறை கூறுவதால், சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை மனதில் வைத்துக் கொண்டே வெறுப்புப் பேச்சு தடுப்பு மசோதா கொண்டு வரப்ப்பட்டு உள்ளது. சில பகுதிகளில், சிலர் சர்ச்சைக்குரிய உரை நிகழ்த்தியதன் பின் நடந்த சம்பவங்களை கவனித்து உள்ளோம்.

இதை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மசோதா கொண்டு வரப்பட்டு இருக்கிறது. யார் என்ன வேண்டுமானாலும் பேசி, கலவரத்தை துாண்டுவதை வேடிக்கை பார்க்க முடியுமா.

இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள 28 அம்சங்கள் குறித்து கவர்னர் கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும், மசோதாவை ஜனாதிபதி பார்வைக்கு அனுப்பிவிட்டார். அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.

இந்த விஷயத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் இரு காதுகளையும் மூடி கொண்டு இருக்கிறார். கவர்னர் இம்மசோதா அமலாவதை எப்படியாவது தடுக்க முயற்சிக்கிறார்.

மசோதாவை ஜனாதிபதி திருப்பி அனுப்பினால், மசோதாவில் பெயரளவில் மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் அனுப்பப்படும். இதில், நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us