தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பஞ்சமசாலி மடத்தில் முறைகேடு விசாரிக்க கவர்னர் உத்தரவு

 பஞ்சமசாலி மடத்தில் முறைகேடு விசாரிக்க கவர்னர் உத்தரவு

 பஞ்சமசாலி மடத்தில் முறைகேடு விசாரிக்க கவர்னர் உத்தரவு


ADDED : செப் 27, 2026 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 11:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ஹரிஹரா வீரசைவ லிங்காயத் பஞ்சமசாலி மடத்தில் நடந்ததாக கூறப்படும் நிதி முறைகேடு குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, அரசுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.

தாவணகெரேயின் ஹரிஹரா தாலுகா ஹனகவாடியில் வீரசைவ லிங்காயத் பஞ்சமசாலி மடம் உள்ளது. இந்த மடத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் நிதி ஒதுக்கப்படுகிறது.

இந்நிலையில், மடத்தில் தங்கும் விடுதி, சமுதாய கூடம் கட்ட அரசு ஒதுக்கிய 10 கோடி ரூபாய் நிதியில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதுகுறித்து விசாரிக்க அரசுக்கு உத்தரவிடும்படியும், ஹரிஹரா தொகுதி ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., சிவசங்கர், பஞ்சமசாலி மடம் பொறுப்பு கூறல் இயக்க தலைவர் பரமேஸ்வர் கவுடா ஆகியோர், கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் கடந்த 23ம் தேதி புகார் அளித்தனர்.

இந்த புகாரை பரிசீலனை செய்த கவர்னரின் சிறப்பு செயலர் பிரபு சங்கர், கர்நாடக அரசின் தலைமை செயலர் ஷாலினிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'நிதி முறைகேடு உள்ளதா என்றும், பணிகள் தரமாக நடக்கிறதா என்றும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். முறைகேடு நடந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டால் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us