வறட்சி பகுதிகளில் ஆய்வு மத்திய குழு அக்., 2ல் வருகை
வறட்சி பகுதிகளில் ஆய்வு மத்திய குழு அக்., 2ல் வருகை
ADDED : செப் 27, 2026 11:13 PM
பெங்களூரு: கர்நாடகாவில் வறட்சி பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்ய, மத்திய குழு, அக்டோபர் 2ம் தேதி வருகை தர உள்ளது.
கர் நாடகாவில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை, எல் நினோவின் தாக்கத்தால் குடிநீர் தட்டுப்பாடு, பயிர் சேதம் கடுமையாக ஏற்பட்டுள்ளது. மாநில அரசு இதுவரை 177 தாலுகாக்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்துள்ளது.
தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் நிதி ஒதுக்க, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் சிவகுமார் கடிதம் எழுதியதுடன், வறட்சியால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய, மத்திய குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையின்படி கர்நாடகாவில் வறட்சி பாதித்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ள, மத்திய விவசாய துறை இணை செயலர் அஜித் குமார் சாகு தலைமையிலான குழு, கர்நாடகாவுக்கு வரும் 2ம் தேதி வருகை தருகிறது. அன்றைய தினமும் முதல்வருடன், மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தி, வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பான அறிக்கை பெறுகின்றனர். பின், 3ம் தேதியில் இருந்து 6ம் தேதி வரை மூன்று குழுக்களாக பிரிந்து ஆய்வு பணிகள் மேற்கொள்ள உள்ளனர்.
