தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுச்சீட்டு முறை மசோதாவில் கையெழுத்திட மறுக்கும் கவர்னர்

 உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுச்சீட்டு முறை மசோதாவில் கையெழுத்திட மறுக்கும் கவர்னர்

 உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுச்சீட்டு முறை மசோதாவில் கையெழுத்திட மறுக்கும் கவர்னர்


ADDED : ஏப் 12, 2026 12:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2026 12:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக, ஓட்டுச்சீட்டு பயன்படுத்த வாய்ப்பளிக்கும் மசோதாவுக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் கையெழுத்திடாமல் நிறுத்தி வைத்துள்ளார். இதனால் கர்நாடக அரசு மற்றும் லோக் பவன் இடையே, மீண்டும் பனிப்போர் துவங்கியுள்ளது.

நிறுத்தம் கர்நாடக அரசு சட்டசபை மற்றும் மேல்சபையில் தாக்கல் செய்து, 11 மசோதாக்களை கவர்னரின் கையெழுத்துக்காக, லோக் பவனுக்கு அனுப்பி வைத்திருந்தது.

இவற்றில் கர்நாடக போலீஸ் மசோதா, கர்நாடக முனிசிபாலிடிகள் திருத்த மசோதா, கர்நாடக அரசு கல்வி நிறுவனங்களின் நிலம் பாதுகாப்பு மசோதா, கர்நாடக சிவில் சேவைகள் திருத்த மசோதா, கர்நாடக நிதி வினியோக மசோதா உட்பட பத்து மசோதாக்களுக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.

ஆனால் ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் உட்பட, மற்ற உள்ளாட்சிகளின் தேர்தலில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக, ஓட்டுச்சீட்டு பயன்படுத்த வாய்ப்பளிக்கும், 'கிராம ஸ்வராஜ் மற்றும் பஞ்சாயத்துராஜ் திருத்த மசோதா - 2026' க்கு கையெழுத்திடாமல் நிறுத்தி வைத்துள்ளார்.

'கிராம ஸ்வராஜ் மற்றும் பஞ்சாயத்துராஜ் திருத்த மசோதா - 2026' க்கு சட்டசபை, மேல்சபையில் அவ்வளவு எளிதாக அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் இடையே, பெரும் மோதல் ஏற்பட்டது. காங்கிரஸ் அரசு மாநிலத்தை பின்னோக்கி கொண்டு செல்கிறது என, குற்றம்சாட்டின. மசோதாவை திரும்ப பெறும்படி வலியுறுத்தின.

ஆனால் இதை பொருட்படுத்தாமல், அரசு மசோதாவுக்கு குரல் ஓட்டெடுப்பு மூலமாக, அங்கீகாரம் பெற்று கொண்டது. ஆனால் இந்த மசோதாவில், கவர்னர் கையெழுத்திடாமல் நிறுத்தி வைத்துள்ளார்.

குற்றச்சாட்டு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களின் சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அப்போது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் குளறுபடி செய்து, தேர்தலில் வெற்றி பெற்றதாக, காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்துக்கு எதிராக, மேலிடம் போராட்டம் நடத்துவதால், ஜி.பி.ஏ., உட்பட உள்ளாட்சி தேர்தலில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்தித்துக்கு பதிலாக, ஓட்டுச்சீட்டு பயன்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காகவே 'கிராம ஸ்வராஜ் மற்றும் பஞ்சாயத்துராஜ் திருத்த மசோதா - 2026' கொண்டு வந்துள்ளது. ஜூன் இறுதிக்குள் ஜி.பி.ஏ.,வுக்கு தேர்தல் நடத்தும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதற்குள் மசோதாவை அமல்படுத்தி, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக, ஓட்டுச்சீட்டு பயன்படுத்துவது, அரசின் எண்ணமாகும். இதற்கு கவர்னர் முட்டுக்கட்டை போட்டுள்ளார்.

மசோதா தொடர்பாக, சில விளக்கங்கள் கேட்டுள்ளார். தேர்தல் நடைமுறையில் தொழில் நுட்பத்தில் பின் வாங்கும் அரசின் முடிவு, ஓட்டுப்பதிவில் பின் விளைவுகள் குறித்து, கவர்னர் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் கர்நாடக அரசு மற்றும் லோக் பவன் இடையே, மீண்டும் பனிப்போர் துவங்கியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us