/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஹிந்து அறநிலைய திருத்த மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பினார் கவர்னர்
/
ஹிந்து அறநிலைய திருத்த மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பினார் கவர்னர்
ஹிந்து அறநிலைய திருத்த மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பினார் கவர்னர்
ஹிந்து அறநிலைய திருத்த மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பினார் கவர்னர்
ADDED : மே 24, 2025 11:07 PM

பெங்களூரு: பணக்கார கோவில்களின் வருவாயில் ஒரு பங்கை, அரசின் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கும் 'கர்நாடக ஹிந்து அறநிலைய கோவில்கள் மற்றும் அறக்கட்டளைகள் திருத்த மசோதா'வுக்கு ஒப்புதல் அளிக்காமல், ஜனாதிபதி திரவுபதி முர்மு பார்வைக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுப்பி உள்ளார்.
கர்நாடகாவின் குக்கே சுப்பிரமண்யர், மைசூரின் சாமுண்டீஸ்வரி, மலை மஹாதேஸ்வரா, கொல்லுார் மூகாம்பிகை உட்பட பல்வேறு கோவில்கள், ஆண்டுதோறும் கோடிக்கணக்கான வருவாய் பெறும் கோவில்களாகும். இவைகள் ஹிந்து அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.
இத்தகைய கோவில்களின் வருவாயில், ஒரு பங்கை அரசின் பரிமாற்றம் செய்து, மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பயன்படுத்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது.
கர்நாடக ஹிந்து அறநிலைய கோவில்கள் மற்றும் அறக்கட்டளைகள் திருத்த மசோதா வகுத்து, சட்டசபை, மேல்சபையில் அங்கீகாரம் பெற்றது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
'ஹிந்து கோவில்களின் வருவாய் மீது, அரசு கண் வைத்துள்ளது. கோவில் உண்டியல்களில் கைவைக்க முற்பட்டுள்ளது. இதற்காகவே மசோதா கொண்டு வந்துள்ளது' என, அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
ஆனால் சட்டசபை, மேல்சபையில் ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதால், மசோதாவுக்கு அரசு எளிதாக அங்கீகாரம் பெற்றுக்கொண்டது. இந்த மசோதாவை கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.
மசோதாவில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பி, கவர்னர் மசோதாவை திருப்பி அனுப்பினார். அறநிலையத்துறையினரும் போதிய விளக்கம் அளித்து, மீண்டும் அனுப்பினர்.
தற்போது, 'மசோதாவில் உள்ள அம்சங்களுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இத்தகைய அம்சங்களுக்கு அரசியல் சாசனத்திலும் நிபந்தனைகள் உள்ளன. எனவே மசோதாவை ஆய்வு செய்ய, ஜனாதிபதியிடம் அனுப்புகிறேன்' என கூறி ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுப்பியுள்ளார்.