/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கனிம வரி மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பினார் கவர்னர்
/
கனிம வரி மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பினார் கவர்னர்
ADDED : மார் 29, 2025 06:57 AM
பெங்களூரு : பெலகாவி சட்டசபை கூட்டத்தொடரில் அங்கீகரிக்கப்பட்ட, கர்நாடக கனிம வரி மசோதா - 2024ஐ, கவர்னர் தாவர்சந்த் கெலாட், ஜனாதிபதி பார்வைக்கு அனுப்பி உள்ளார்.
கடந்தாண்டு பெலகாவியில் நடந்த கூட்டத்தொடரில், கனிம வரி மசோதாவை மாநில அரசு, சட்டசபை, மேல்சபையில் தாக்கல் செய்து, அங்கீகாரம் பெற்றது. இந்த மசோதாவை கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பியது.
இந்த மசோதா அனைத்து பிரிவின் சுரங்கங்களில், ஒரு டன் கனிமத்துக்கு 20 முதல், 100 ரூபாய் வரை வரி விதிக்க வாய்ப்பளிக்கிறது.
இதனால் அரசுக்கு 4,713 கோடி வருவாய் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மசோதாவை ஆய்வு செய்த கவர்னர் தாவர்சந்த் கெலாட், 'இம்மசோதாவில் உள்ள அம்சங்கள், வன பாதுகாப்பு சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், சுரங்கம் மற்றும் கனிம வளம் சட்டங்களை கட்டுப்படுத்தும். மசோதாவுக்கு அங்கீகாரம் அளித்தால், லோக்சபா தொகுதிகளில் தலையிட்டதை போன்றதாகும். மாநில அரசு வருவாய் வசூலிக்கும் ஒரே நோக்கில், மசோதாவை வகுத்துள்ளது' என கருத்து தெரிவித்தார்.
மசோதாவில் கையெழுத்திடாமல், ஜனாதிபதியின் பார்வைக்கு அனுப்பி உள்ளார்.