படிவம் – 7 தவறாக பயன்படுத்தப்பட்டதா : விசாரணை நடத்த அரசு முடிவு
படிவம் – 7 தவறாக பயன்படுத்தப்பட்டதா : விசாரணை நடத்த அரசு முடிவு
UPDATED : நவ 06, 2026 07:21 PM
ADDED : நவ 06, 2026 12:18 AM
பெங்களூரு: ‘‘ஓட்டு திருட்டுக்கு துாண்டுதலாக இருந்தது, விண்ணப்ப படிவம் – 7 ஐ, தவறாக பயன்படுத்தியது குறித்து, விசாரணை நடத்த, அரசு முடிவு செய்துள்ளது,’’ என, முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
பெங்களூரின், சுதந்திர பூங்காவில் இண்டி கூட்டணி சார்பில், ‘ஓட்டு திருட்டை நிறுத்துங்கள், நாட்டை காப்பாற்றுங்கள்’ என்ற பெயரில், நேற்று போராட்டம் நடந்தது.
இதில் முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
தேர்தல் ஆணையத்துக்கு எதிராக மட்டுமே, நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. தேர்தல் ஆணையத்தின் பின்னே உள்ள, பா.ஜ.,வின் சதிக்கு எதிராகவும் போராட்டம் நடத்துகிறோம். பொதுமக்களின் ஓட்டுகளை காப்பாற்றுவதில், எங்களுக்கு அக்கறை உள்ளது.
ஓட்டு திருட்டை துாண்டி விட்டது யார், விண்ணப்ப படிவங்களை கொண்டு கொடுத்தது யார் என்பதற்கு, கண்காணிப்பு கேமரா ஆவணங்கள் உள்ளன. இது பற்றி வழக்கு பதிவு செய்து, சமுதாயத்துக்கு நியாயம் கிடைக்க செய்வோம்.
மக்களின் ஓட்டுகளை பா.ஜ., திருடியுள்ளது. இக்கட்சி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடகா மட்டுமின்றி, பீஹார், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, ஹரியானா, தமிழகத்திலும் பா.ஜ., தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி, வாக்காளர்கள் உரிமைகளை தவறாக பயன்படுத்தியது.
தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்தின் படி செயல்படாமல், ஒரு கட்சியின் தொண்டர்களை போல செயல்படுகிறது.
ஓட்டு திருட்டுக்கு துாண்டுதலாக இருந்தது மற்றும் விண்ணப்ப படிவம் – 7 ஐ, தவறாக பயன்படுத்தியது குறித்து, விசாரணை நடத்த, அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
