தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சிகிச்சை கட்டணங்களை வெளியிட வேண்டும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு உத்தரவு

சிகிச்சை கட்டணங்களை வெளியிட வேண்டும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு உத்தரவு

சிகிச்சை கட்டணங்களை வெளியிட வேண்டும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு உத்தரவு


UPDATED : அக் 23, 2026 12:00 AM

ADDED : அக் 22, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 12:00 AM ADDED : அக் 22, 2026 10:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை கட்டணத்தை நோயாளிகள் தெரிந்து கொள்ள வசதியாக, வெளிப்படையாக அறிவிப்பதை கர்நாடக அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்த விதிமுறை நவம்பர் 1ல் அமலுக்கு வருகிறது.

அரசு மருத்துவனைகளில் அடிப்படை வசதிகள் இல்லை. தரமான சிகிச்சை கிடைப்பது இல்லை. மருந்துகள் பற்றாக்குறை, மருத்துவ ஊழியர்களின் அலட்சியம் என, பல்வேறு காரணங்களால், அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சை செல்ல நோயாளிகள் தயங்குகின்றனர். தனியார் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர்.

சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தும், தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளிடம் அதிகமான கட்டணம் வசூலிக்கின்றன. அவசர நேரத்தில் நனியார் மருத்துவமனைகளில், நோயாளிகளை சேர்க்கும் குடும்பத்தினர், சிகிச்சை கட்டணம் குறித்து தெரிந்து கொள்வது இல்லை. சில நாட்கள் சிகிச்சைக்கு பின், கட்டண பில்லை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர்.

வட்டிக்கு கடன் வாங்கியோ, தங்கநகைகளை விற்றோ கட்டணம் செலுத்துகின்றனர்.

சிகிச்சை பலனளிக்காமல், நோயாளி இறந்து விட்டால், முழுமையான சிகிச்சை கட்டணத்தை செலுத்தும் வரை, உடலை கொடுக்க மறுக்கும் சம்பவங்கள், ஆங்காங்கே நடக்கின்றன.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில், தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை கட்டணத்தை நோயாளிகள் தெரிந்து கொள்ள வசதியாக, வெளிப்படையாக அறிவிப்பதை கட்டாயமாக்கியுள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத்துறை பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு, எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதில், குழப்பம் ஏற்படுகிறது. மருந்துகள், மருத்துவ பரிசோதனை கட்டணங்கள் குறித்தும் தெரிவது இல்லை.

இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நவம்பர் 1 முதல், மாநிலத்தின் அனைத்து மருத்துவமனைகளில் சிகிச்சை கட்டணங்களை, வெளிப்படையாக அறிவிப்பது கட்டாயமாகும். நோயாளிகளுக்கு அளிக்கும் பில்களில், மருத்துவமனைகள் மருந்துகளை வாங்கிய விலை மற்றும் எம்.ஆர்.பி., விலை என, இரண்டையும் குறிப்பிட வேண்டும். இதனால் நோயாளிகள் மருந்துகளின் விலையை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

மருத்துவமனைகளில் என்னென்ன சிகிச்சைகள் கிடைக்கின்றன, ஒவ்வொரு சிகிச்சைக்கு ம் எவ்வளவு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்ற தகவல், நோயாளிகளுக்கு தெரிய வேண்டும். மருத்துவமனைகளில் பதிவு கவுன்டர் உட்பட, பொது மக்களுக்கு தெளிவாக தெரியும் இடங்களில், சிகிச்சை விபரங்கள், கட்டணங்களை வெளியிட வேண்டும். நவம்பர் 1 முதலே, இந்த விதிமுறையை பின்பற்ற வேண்டும்.

மருத்துவமனையில் சேரும் முன்னரே, நோயாளிகள் செலவை பற்றி தெரிந்து கொள்ள முடியும். சிகிச்சை பெயரில் எதிர்பாராமல் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க, இந்த விதிமுறை கொண்டு வரப்படுகிறது.

மருந்துகள் வாங்கியது, விற்றது தொடர்பான ஆவணங்களை, மூன்று ஆண்டுகள் வரை, மருத்துவமனைகள் பாதுகாக்க வேண் டும். அவசியம் ஏற்பட்டால் மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள், ஆவணங்களை ஆய்வு செய்வர். விதிகளை மீறியது தெரிந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us