/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அடுக்குமாடி கட்டடங்களில் இரண்டு குப்பை தொட்டிகள் ஜி.பி.ஏ., கமிஷனர் உத்தரவு

ADDED : மார் 04, 2026 05:48 AM

பெங்களூரு: பெங்களூரு கிழக்கு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், மூன்று தளங்களுக்கு மேல் உள்ள அனைத்து கட்டடங்களிலும் மக்கும், மக்கா குப்பை என தனித்தனியாக குப்பை தொட்டிகள் கட்டாயம் வைக்கப்பட வேண்டும் என்ற, அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
பெங்களூரு கி ழக்கு மாநகராட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் பங்கேற்றார். அவர் பேசியதாவது:
பெங்களூரு கிழக்கு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் மூன்று தளங்களுக்கு மேல் உள்ள அனைத்து கட்டடங்களிலும் மக்கும், மக்கா குப்பை என தனித்தனியாக குப்பை தொட்டிகள் கட்டாயம் வைக்க வேண்டும். இது தொடர்பாக, அதிகாரிகள் உ டனடியாக சுற்றறிக்கை வெளியிட வேண்டும்.
அந்த சுற்றறிக்கையை, சம்பந்தப்பட்ட கட்டடங்களுக்கு அனுப்ப வேண்டும். அவற்றின் வளாகங்களுக்குள் தனித்தனி குப்பை தொட்டிகள் நிறுவுவதை அறிவுறுத்த வேண்டும்.
கே.ஆர்.,புரம் சட்டசபை தொகுதிக்குள் உள்ள முக்கிய சாலைகளை ஆய்வு செய்து, நடைபாதைகள் பழுதுபார்க்க வேண்டிய பகுதிகள் மற்றும் புதிய நடைபாதைகள் கட்டப்பட வேண்டிய பகுதிகளை அடையாளம் கண்டு, அதிகாரிகள் பட்டியல் தயாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.