/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 'கிரஹ லட்சுமி' உதவித்தொகை
/
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 'கிரஹ லட்சுமி' உதவித்தொகை
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 'கிரஹ லட்சுமி' உதவித்தொகை
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 'கிரஹ லட்சுமி' உதவித்தொகை
ADDED : ஜூலை 11, 2025 11:03 PM

மைசூரு: “'கிரஹ லட்சுமி' திட்டத்தின் உதவித்தொகையை, மாதந்தோறும் வழங்க முடியவில்லை. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பணம் செலுத்தப்படும்,” என வாக்குறுதித் திட்டங்களின் தலைவர் ரேவண்ணா தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கிரஹ லட்சுமி திட்டத்தை, நாங்கள் நிறுத்தவில்லை. ஆனால் மாதந்தோறும் நிதி வழங்குவதில், சில சிக்கல்கள் உள்ளன. எனவே மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உதவித்தொகை வழங்குகிறோம். 1.20 லட்சம் பயனாளிகளுக்கு பணம் கிடைக்கவில்லை. இதில் 58,000 பேரின் பிரச்னைகளை சரி செய்து, பணம் கிடைக்க வழி செய்துள்ளோம். மற்றவர்களுக்கும் விரைவில் பணம் கிடைக்கும்.
மாநிலத்தில் முதல்வர் மாற்றம் குறித்து, மேலிட அளவில் ஆலோசனை நடக்கவில்லை. கட்சியில் சில குழப்பங்கள் இருந்தன. இவற்றை மேலிட தலைவர்கள் சரி செய்தனர். முதல்வர் நாற்காலி குறித்து, ஊடகத்தினர் முன்னிலையில் பேசக்கூடாது என, எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ.,க்களின் கருத்துகள் குறித்து, ஆலோசிக்கப்பட்டது. எந்த எம்.எல்.ஏ.,வின் ஆதரவு, யாருக்கு என்ற கேள்வி இப்போது ஏன் வந்தது என்பது தெரியவில்லை.
சிவகுமாரும், சித்தராமையாவும் இரட்டை காளைகள் போன்று செயல்பட்டு, கட்சியை ஆட்சியில் அமர்த்தினர். அரசியலில் அனைவருக்கும் பெரிய பதவியில் அமர வேண்டும் என்ற ஆசை இருக்கும். இறுதி முடிவு எடுப்பது, மேலிடம்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.