/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பேரன் கண் முன்னே பாட்டி படுகொலை
/
பேரன் கண் முன்னே பாட்டி படுகொலை
ADDED : ஜன 13, 2026 05:08 AM

மாதநாயக்கனஹள்ளி: பேரன் கண்முன்பு பாட்டியை கோடரியால் வெட்டி கொன்றவரை, போலீசார் தேடுகின்றனர்.
பெங்களூரு ரூரல் மாதநாயக்கனஹள்ளி அருகே கூடுரகெரே கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ், 60. இவரது மனைவி திரக் ஷனம்மா, 55. நேற்று மாலையில் மகன் வழி பேரனான 8 வயது சிறுவனை, பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து சென்றார்.
அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவர், திரக் ஷனம்மாவிடம் தகராறு செய்தார். திடீரென பைக்கில் இருந்து கோடரியை எடுத்து, திரக் ஷனம்மாவை வெட்டிவிட்டு தப்பினார். ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். பாட்டி கண்முன்பு இறந்ததை பார்த்து பேரன் அலறினார். அந்த வழியாக சென்றவர்கள் வந்து பார்த்த போது கொலை நடந்தது தெரிந்தது. கொலையாளி யார், என்ன காரணம் என்று தெரியவில்லை. சொத்து தகராறு காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

