/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூருக்கு இன்று வருகிறார் ராகுல்
/
மைசூருக்கு இன்று வருகிறார் ராகுல்
ADDED : ஜன 13, 2026 05:07 AM
மைசூரு: காங்கிரஸ் எம்.பி., ராகுலை சந்திக்க, முதல்வர் சித்தராமையா இன்று மைசூரு வருகை தருகிறார்.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கூடலுாரில் உள்ள செயின்ட் தாமஸ் உயர்நிலைப்பள்ளி பொன் விழாவில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பங்கேற்கிறார். இதில் பங்கேற்ற பின், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம், மைசூரு மண்டகள்ளி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து, புதுடில்லிக்கு தனி விமானத்தில் புறப்படுகிறார்.
இதையடுத்து, முதல்வர் சித்தராமையா இன்று மைசூரு வருகை தந்து, அவரை தனிப்பட்ட முறையில் வரவேற்கிறார்.
பின், 2:35 மணிக்கு ராகுலை வழியனுப்பி வைத்த பின், மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். அதை தொடர்ந்து மாலை 6:55 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் பெங்களூரு திரும்புகிறார்.

