தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/2 பேரன்களுடன் தாத்தாவும் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

2 பேரன்களுடன் தாத்தாவும் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

2 பேரன்களுடன் தாத்தாவும் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 06:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 06:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிக்கபல்லாபூர்: சுவாமி கும்பிட சென்றிருந்த இடத்தில், தாத்தா, இரண்டு பேரன்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர்.

சிக்கபல்லாபூர் மாவட்டம், சிந்தாமணி தாலுகாவின் ஹுசேனாபுரா கிராமத்தில் வசித்தவர் முனி நாராயணப்பா, 60. இவரது நிலத்தில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமை அன்று கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது, இவரது குடும்பத்தின் வழக்கம்.

அதே போல, ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய, நேற்று முன்தினம் முனி நாராயணப்பா வீட்டில் இருந்து கிளம்பிய போது, அவரது பேரன்கள் யஷ்வின், 9, பிரஜ்வல், 8, ‘நாங்களும் வருவோம்’ என அடம்பிடித்தனர். எனவே, பேரன்களையும் அழைத்து சென்றார்.

கோவிலில், தாத்தா பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போது, பேரன்கள் இருவரும் தண்ணீர் எடுத்து வர, பக்கத்தில் இருந்த குளத்துக்கு சென்றனர். அப்போது கால் தவறி நீரில் விழுந்தனர்.

இதை பார்த்த முனி நாராயணப்பா, பேரன்களை காப்பாற்ற நீரில் குதித்தார். மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கோவிலுக்கு சென்ற மூவரும், இரவு நெருங்கியும் வீடு திரும்பாததால் கலக்கமடைந்த குடும்பத்தினர், கோவிலுக்கு அருகே சென்று பார்த்த போது, தாத்தாவும், பேரன்களும் குளத்தில் இறந்து கிடப்பது தெரிந்தது.

இறந்த யஷ்வின், முனி நாராயணப்பா மகன் நந்தீஷின் மகன்; பிரஜ்வல், முனி நாராயணப்பா சகோதரர் வெங்கட ரோணப்பாவின் மகன்.

தகவலறிந்த சிந்தாமணி ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us