/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல்வருடன் சென்ற பேரன் மஹாதேவப்பா வக்காலத்து
/
முதல்வருடன் சென்ற பேரன் மஹாதேவப்பா வக்காலத்து
ADDED : அக் 05, 2025 04:00 AM

மைசூரு: தசராவின்போது திறந்த ஜீப்பில், முதல்வர் சித்தராமையாவுடன் தன் பேரன் சென்றதற்கு, அமைச்சர் மஹாதேவப்பா வக்காலத்து வாங்கியுள்ளார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மைசூரில் 11 நாட்கள் நடந்த தசராவை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். இது முழுக்க, முழுக்க மக்களின் தசராவாக அமைந்துள்ளது. விழா நடந்த 11 நாட்களும் குப்பை உடனுக்குடன் அகற்றப்பட்டன. இதற்காக துாய்மைப் பணியாளர்களுக்கு நன்றி. மாவட்ட நிர்வாகம், போலீஸ் உட்பட அனைத்து துறைகளுக்கும் நன்றி.
தசராவின் ஆரம்பத்தில் சில குழப்பங்கள் இருந்தன. எல்லாவற்றையும் சரி செய்தோம். தசராவில் எந்த அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கும் இடம் கொடுக்கவில்லை. இது தான் வெற்றிக்கு காரணம்.
ஜம்பு சவாரி துவங்குவதற்கு முன்பு முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர் சிவராஜ் தங்கடகி, நான், திறந்த ஜீப்பில் சென்றோம். அந்த ஜீப்பில் என் பேரனும் இருந்தார். ஜீப்பில் சென்றது அணிவகுப்புக்காக இல்லை. மக்களை சந்திக்க தான். இதனால் அது ஆசார வரம்பில் வராது. என் பேரனை ஜீப்பில் அழைத்துச் சென்றது தவறு இல்லை. சிலர் சர்ச்சையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.