/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'கிரீஸ்' டப்பாவில் தீப்பிடித்து விபத்து காஸ் சிலிண்டர் வெடித்து 8 பேர் காயம்
/
'கிரீஸ்' டப்பாவில் தீப்பிடித்து விபத்து காஸ் சிலிண்டர் வெடித்து 8 பேர் காயம்
'கிரீஸ்' டப்பாவில் தீப்பிடித்து விபத்து காஸ் சிலிண்டர் வெடித்து 8 பேர் காயம்
'கிரீஸ்' டப்பாவில் தீப்பிடித்து விபத்து காஸ் சிலிண்டர் வெடித்து 8 பேர் காயம்
ADDED : அக் 20, 2025 06:55 AM

பாகல்கோட்: ஆழ்துளை கிணறுக்கு பயன்படுத்தும் கிரீஸ் பெட்டியில் இருந்து கசிந்த கிரிசில், விளக்கு தீப்பொறி பற்றி எறிந்ததுடன், சமையல் காஸ் சிலிண்டர் வெடித்ததில் இரு குழந்தைகள் உட்பட எட்டு பேர் காயமடைந்தனர்.
பாகல்கோட்டின் கட்டன்கேரி கிராசில் உமேஷ் மேட்டி என்பவரின் வீட்டில், ராஜேந்திர தபஷெட்டி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர், போர்வெல் ஆழ்துளை கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
ஆழ்துளை கிணறு தோண்டுவதற்காக இயந்திரங்களுக்கு, 'கிரீஸ்' பயன்படுத்தப்படும். இதை, தன் வீட்டின் முன் பெரிய பிளாஸ்டிக் கேனில் ராஜேந்திர தபஷெட்டி வைத்திருந்தார். மேல் வீட்டில், மற்றொரு குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் வசித்து வருகின்றனர்.
ராஜேந்திர தபஷெட்டியின் மனைவி, வீட்டின் முன் தீபம் ஏற்றி வைத்திருந்தார். அருகில் வீட்டின் முன் வைக்கப்பட்டிருந்த கிரீஸ் கேன் இருந்தது. நேற்று அதிகாலையில் தீபத்தின் பொறி, கிரீஸில் பட்டவுடன், தீப்பிடித்து கொண்டது.
அங்கிருந்த ஏழு இரு சக்கர வாகனங்களில் தீப்பிடித்தது. தீப்புகையை உணர்ந்த தபஷெட்டி, தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்து வெளியேறினார். அனைத்து இரு சக்கர வாகனங்களும் சேதமடைந்தன. அதற்குள் வீட்டில் இருந்த சமையல் காஸ் கசிந்து வெடித்தது.
இதில், மேல் வீட்டில் வசித்த கல்மேஷ் தரியப்பா லோகன்னபரா, 30, சச்சின் பிரகாஷ் மேரி, 28, கணேஷ், 26, தபு தேவி, 28, ஸ்நேகா, 22, ஸ்ருதி, 23, ஐஸ்வர்யா, 13, டிம்பிள் படேல், 1, ஆகிய எட்டு பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கலடகி போலீசார் விசாரிக்கின்றனர்.