/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் 5 மாநகராட்சி பெயர்கள் அறிவிப்பு
/
கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் 5 மாநகராட்சி பெயர்கள் அறிவிப்பு
கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் 5 மாநகராட்சி பெயர்கள் அறிவிப்பு
கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் 5 மாநகராட்சி பெயர்கள் அறிவிப்பு
ADDED : ஜூலை 19, 2025 11:15 PM
பெங்களூரு: கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் கீழ் உதயமாக உள்ள ஐந்து மாநகராட்சி பெயர்களை அரசு வெளியிட்டுள்ளது. ஆட்சேபனைகளை தெரிவிக்க, ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நிர்வாக காரணங்களுக்காக 'கிரேட்டர் பெங்களூரு ஆணையம்' அமைக்க முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு முடிவு செய்தது.
இதற்கான மசோதா சட்டசபை, மேல்சபையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. கவர்னரும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்.
கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் கீழ், எத்தனை மாநகராட்சிகள் உருவாக்குவது என்பது பற்றி ஆராய்ந்து, அறிக்கை தாக்கல் செய்ய, சிவாஜிநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கர்நாடக அரசின் நகர மேம்பாட்டுத் துறை செயலர் நந்தகுமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் கீழ் பெங்களூரு மேற்கு, தெற்கு, வடக்கு, கிழக்கு, சென்ட்ரல் என்ற பெயர்களில், ஐந்து மாநகராட்சி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டு உள்ளது.
'ஆட்சேபனை தெரிவிக்க, பொதுமக்களுக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
'கூடுதல் தலைமை செயலர், நகர மேம்பாட்டுத் துறை, அறை எண் 436, நான்காவது தளம், விகாஸ் சவுதா, பெங்களூரு - 560001 என்ற முகவரிக்கு ஆட்சேபனை அல்லது பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். அரசு பரிசீலிக்கும்,' என கூறப்பட்டு உள்ளது.