/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கிரேட்டர் பெங்களூரு அமைச்சரவை ஒப்புதல்
/
கிரேட்டர் பெங்களூரு அமைச்சரவை ஒப்புதல்
ADDED : மே 10, 2025 11:52 PM
பெங்களூரு: கிரேட்டர் பெங்களூரு மசோதாவிற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மாநகராட்சியை சுமூகமாக நிர்வகிக்க, மாநகராட்சியை பல பகுதிகளாக பிரித்து நிர்வாகம் செய்ய, காங்கிரஸ் அரசு ஆலோசித்து வந்தது. இதற்கு 'கிரேட்டர் பெங்களூரு' என பெயரிடப்பட்டது.
இதற்கான மசோதா கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது. பா.ஜ., - ம.ஜ.த.,வினர் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், பெங்களூரில் நேற்று முன்தினம் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், கிரேட்டர் பெங்களூரு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
கிரேட்டர் பெங்களூரு நிர்வாக சட்டம், வரும் 15ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் கூறினார்.
இதன் மூலம், பெங்களூரை ஏழு நகராட்சிகளாக பிரிக்க முடியும். மேலும், கிரேட்டர் பெங்களூரு ஆணையம், நகர நிறுவனங்கள், வார்டு குழுக்கள் ஆகியவை உருவாக்கப்படும். கிரேட்டர் பெங்களூரு 709 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது.
கிரேட்டர் பெங்களூரு அமலுக்கு வரும் வரை, பெங்களூரை மாநகராட்சியே நிர்வகிக்கும். தற்போது வரை, மாநகராட்சியை பல பகுதிகளாக பிரிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து தெளிவான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும், இந்த கிரேட்டர் பெங்களூரால் பல மாற்றங்கள் நிகழும் என கூறப்படுகிறது.
அமைச்சரவை கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்தும் ஆலோசனை நடந்துள்ளது. இதில், 11 அமைச்சர்கள், தங்கள் கருத்துகளை கடிதம் மூலம் முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளனர்; மீதிமுள்ளோர் அடுத்த கூட்டத்தில் கடிதம் மூலமாக தங்கள் கருத்துகளை சமர்ப்பிப்பர் என தகவல் வெளியாகி உள்ளது.