தங்கவயலில் ரிசர்வ் போலீஸ் பயிற்சி நிலையத்துக்கு பூமி பூஜை
தங்கவயலில் ரிசர்வ் போலீஸ் பயிற்சி நிலையத்துக்கு பூமி பூஜை
ADDED : ஜன 19, 2026 06:09 AM

தங்கவயல்: தங்கவயலில் ஐ.ஆர்.பி., பயிற்சி நிலையத்துக்கு நாளை பூமி பூஜை நடக்கிறது.
இதுகுறித்து தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா அளித்த பேட்டி:
கர்நாடகாவில் நந்திமலை பகுதி, தங்கவயல் என இரண்டு இடங்களில் ஐ.ஆர்.பி., எனும் இந்திய ரிசர்வ் போலீஸ் பயிற்சி நிலையம் அமைக்கப்படும் என மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்காக பூமி பூஜை பணியை துவக்க உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், தங்கவயலுக்கு இம்மாதம் 20 ம் தேதி வருகிறார்.
தங்கவயலில் உலகமதி குன்று அருகே 100 ஏக்கரில் 1,000 போலீசாருக்கு பயிற்சி அளிக்க ஐ.ஆர்.பி., நிலையம் அமைக்கப்படுகிறது. போலீசாருக்கு பயிற்சி அளிக்க கமாண்டர்கள் இருப்பர்.
இதற்கு முன்பே, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பயிற்சி நிலையம் அமைக்க இடம் வசதி இருப்பதை ஆய்வு செய்திருந்தார். இந்த பயிற்சி நிலையம் உருவாக்குவது ஒரு வரலாற்றை ஏற்படுத்தும். இங்கு நாட்டின் பாதுகாப்புக்கான பயிற்சி அளிக்கப்படும். பல கோடி ரூபாய் செலவில் நிலையம் உருவாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
