தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கூட்ட நெரிசலுக்கான வழிகாட்டி விதிமுறைகள்; : அமல்படுத்த மாநில அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

 கூட்ட நெரிசலுக்கான வழிகாட்டி விதிமுறைகள்; : அமல்படுத்த மாநில அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

 கூட்ட நெரிசலுக்கான வழிகாட்டி விதிமுறைகள்; : அமல்படுத்த மாநில அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு


ADDED : பிப் 24, 2026 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 06:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: மாநில அரசு வெளியிட்ட, கூட்ட நெரிசலுக்கான வழிகாட்டி விதிமுறைகளை அமல்படுத்தும்படி, மாநில அரசுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடந்தாண்டு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்த சம்பவம் தொடர்பான பொதுநல மனு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனு மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி பூனாச்சா முன் வந்தது.

அப்போது நடந்த விவாதம்:

விசாரணையின் போது, நீதிமன்றத்துக்கு உதவும் வக்கீல் சுசீலா வாதிட்டதாவது:

சம்பவத்தில் என்ன நடந்து என்பது பற்றிய பிரச்னைக்குள் நாங்கள் செல்லப்போவதில்லை. நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இம்மனு தாக்கல் செய்யப்பட்டபோது, ஒன்பது கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்த மனுவின் வரம்புகள் எனக்கு தெரியும். கர்நாடக கூட்ட கட்டுப்பாடு மசோதா சட்டமாக இயற்றப்படும் வரை, மாநில அரசு வெளியிட்ட, கூட்ட நெரிசலுக்கான வழிகாட்டி நெறிமுறைகளை செயல்படுத்த வேண்டும்.

தலைமை நீதிபதி விபு பக்ரு:

தற்போது கூட்ட கட்டுப்பாடு தொடர்பான மசோதா, ஹவுஸ் கமிட்டியில் உள்ளது. இது சட்டமாக இயற்றப்படும் வரை, அரசு வெளியிட்ட, கூட்ட நெரிசலுக்கான வழிகாட்டி நெறிமுறைகளை செயல்படுத்த வேண்டும் என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us