/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வழிகாட்டுதல் வெளியீடு ஆர்.சி.பி., ரசிகர்கள் 11 பேர் பலியான விவகாரம் எதிரொலி
/
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வழிகாட்டுதல் வெளியீடு ஆர்.சி.பி., ரசிகர்கள் 11 பேர் பலியான விவகாரம் எதிரொலி
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வழிகாட்டுதல் வெளியீடு ஆர்.சி.பி., ரசிகர்கள் 11 பேர் பலியான விவகாரம் எதிரொலி
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வழிகாட்டுதல் வெளியீடு ஆர்.சி.பி., ரசிகர்கள் 11 பேர் பலியான விவகாரம் எதிரொலி
ADDED : ஜூலை 02, 2025 07:18 AM
பெங்களூரு : சின்னசாமி மைதானத்தின் முன் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஆர்.சி.பி., ரசிகர்கள் 11 பேர் பலியான சம்பத்தின் எதிரொலியாக, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அரசு நிலையான வழிகாட்டுதலை வெளியிட்டு உள்ளது.
ஆர்.சி.பி., அணி ஐ.பி.எல்., கோப்பை வென்றதை கொண்டாடும் வகையில், கடந்த மாதம் 4ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விழா நடந்தது.
மைதானம் முன் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, ரசிகர்கள் 11 பேர் பலியாகினர்.
இதையடுத்து கூட்டம் அதிகம் கூடும் இடங்களில், கூட்டத்தை கட்டுப்படுத்த நிலையான வழிகாட்டு விதிகள் வெளியிடப்படும் என்று, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறி இருந்தார். அதன்படி அரசு தரப்பில் நேற்று நிலையான விதிகள் வெளியிடப்பட்டன.
சாத்தியக்கூறு
கூட்டம் அதிகமாக கூடும் இடங்களில் உயிர் பாதுகாப்பு, பொது சொத்திற்கு சேதம் ஏற்படுவதை தடுப்பதில், போலீசார் முன்னுரிமை அளிப்பது
ஆரம்பகால திட்டமிடல், நிகழ்ச்சி நடத்துவோருடன் இணைந்து நிகழ்ச்சி நடக்கும் இடத்தை ஆய்வு செய்து, விரிவான திட்டத்தை தயாரிக்க வேண்டியது அவசியம்
அவசரகால வெளியேற்றங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வது
நிகழ்ச்சி நடக்கும் இடத்தின், ஆபத்தான பகுதியை முன்கூட்டியே கண்டறிதல்
மக்கள் எளிதில் வந்து செல்வதற்கு ஏற்ற வகையில், பாதைகள் அமைப்பது
அவசரகாலத்தில் எப்படி செயல்படுவது, தகவல் தொடர்பு உள்கட்டமைப்பை மேம்படுத்துவது பற்றி, முன்கூட்டியே திட்டமிடுவது.
நன்கு பயிற்சி
நிகழ்ச்சி நடக்கும் இடங்களில் முன்கூட்டியே ஆய்வு செய்யும்போது, சரியான இடம் இல்லை என்பது தெரிந்தால், கண்டிப்பாக நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கக் கூடாது
இடம், தேதி, நேரத்தை நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களிடம் கேட்டு, சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப ஏற்பாடுகளை செய்வது முக்கியம்
தீயணைப்பு, சுகாதார துறையுடன் ஒருங்கிணைந்து போலீசார் செயல்படுதல்
கூட்ட மேலாண்மை திட்டத்தை உருவாக்க வேண்டும். நுழைவு, வெளியேறும் பகுதியில் கூட்டத்தை கட்டுப்படுத்த, நன்கு பயிற்சி பெற்ற அதிகாரியை பணி அமர்த்துவது
நிகழ்ச்சி நடக்கும் இடத்தின் நுழைவுவாயில் பகுதியில், 'மெட்டல் டிடெக்டர்' கருவி உதவியுடன் சோதனை நடத்துவது அவசியம்.
பார்க்கிங் வசதி
வி.ஐ.பி.,க்கள், பொதுமக்கள் தனிதனியாக செல்லும் வகையில், பாதை அமைப்பது
மக்கள் வரிசையாக செல்வதை உறுதி செய்தல்
அவசரகால வழிகள் தடையின்றி செயல்படுவதை, உறுதிப்படுத்துவது
ஆம்புலன்ஸ்களை நிறுத்த பார்க்கிங் வசதி; மருத்துவ குழுவுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பது
நிகழ்ச்சி நடத்துவோர் கமிஷனர் அல்லது எஸ்.பி.,யிடம் அனுமதி பெறுவது கட்டாயம்.
கடைசி முயற்சி
நிகழ்ச்சி நடக்கும் இடங்களில், அடிக்கடி ஒத்திகை நடத்துவது அவசியம்
மாற்றுத்திறனாளிகள் எளிதில் செல்லும் வகையில் தனி பாதை
கூட்டம் ஒரே இடத்தில் கூடுவதை தடுப்பது.
சாத்தியமான இடங்களில் ஒலிபெருக்கிகளை வைத்து, அதன்மூலம் கூட்டத்தை கலைந்து செல்லும்படி எச்சரிப்பது
கூட்டத்தை கலைக்க தடியடி நடத்துவது, கடைசி முயற்சியாக கொள்ள வேண்டும். அதுவும் சட்டத்திற்கு உட்பட்டு தான் இருக்க வேண்டும்
கூட்டத்தில் யாராவது பிரச்னை செய்தால், கைது செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவால் மட்டுமே, அவர் கைது செய்யப்பட வேண்டும். அவர் என்ன தவறு செய்தார் என்று தெரிவிக்க வேண்டும்
கூட்டத்தை வீடியோ எடுப்பது முக்கியம்.