ADDED : செப் 11, 2026 02:56 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம், ஜான்சன்பேட்டையை சேர்ந்தவர் தங்கபாண்டியன், 23. இவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து கஞ்சா விற்பதாக, அதே பகு-தியை சேர்ந்த டேவிட் தெரிவித்தார்.
இதனால் கடந்த ஆக., 23ல் டேவிட்டை கத்தியால் தாக்கினார். காயம் அடைந்த டேவிட் புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் தங்கபாண்டியனை கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே, போதை மாத்திரை, கஞ்சா விற்ற வழக்குகள் உள்ளன. இதனால் அவரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, போலீஸ் கமிஷனர் ஜோஷி நிர்மல்குமார் நேற்று உத்தரவிட்டார்.
