ADDED : செப் 11, 2026 02:57 AM
அ நிறம் | அளவு
மேட்டூர்: மேட்டூர், காவிரி பாலம், அம்மன் கோவில் வீதியை சேர்ந்த மீன் விற்பனையாளர் ஜெயந்தி, 49. இவரது கணவர் இறந்து-விட்டார். 3 மகள்களுக்கும் திருமணமானதால், ஜெயந்தி மட்டும் கூரை வீட்டில் வசித்தார். நேற்று காலை ஜெயந்தி வெளியே சென்ற நிலையில், கூரை வீட்டின் உட்பகுதியில் இருந்து புகை வந்தது.
மக்கள் தகவல்படி, மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று, தண்-ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டின் பெரும் பகுதி எரிந்து சேதமானது. விபத்துக்கான காரணம் குறித்து மேட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
