/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இளம்பெண்ணுடன் 'சாட்டிங்' 'ஜிம்' பயிற்சியாளர் மீது தாக்கு
/
இளம்பெண்ணுடன் 'சாட்டிங்' 'ஜிம்' பயிற்சியாளர் மீது தாக்கு
இளம்பெண்ணுடன் 'சாட்டிங்' 'ஜிம்' பயிற்சியாளர் மீது தாக்கு
இளம்பெண்ணுடன் 'சாட்டிங்' 'ஜிம்' பயிற்சியாளர் மீது தாக்கு
ADDED : அக் 03, 2025 01:31 AM
ஹெப்பகோடி: தங்கைக்கு மெசேஜ் அனுப்பியதால், ஜிம் டிரெய்னரை தாக்கிய அண்ணன்கள் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
பெங்களூரு ரூரல் மாவட்டம், ஆனேக்கல் தாலுகாவின், ஹெப்பகோடியின், அனந்தநகரில் உடற் பயிற்சி மையம் உள்ளது. இதில் சந்தீப், 27, பயிற்சியாளராக பணியாற்றுகிறார். இதே பகுதியில் வசிக்கும் அனுஷா, 20, இந்த உடற்பயிற்சி மையத்துக்கு செல்வார்.
தினமும் உடற்பயிற்சி மையத்திற்கு சென்றதால், சந்தீப்பும், அனுஷாவும் நண்பர்களாகினர். இருவரும் மொபைல் போனில், 'சாட்டிங்' செய்தனர். இதை அனுஷாவின் அண்ணன்கள் அருண், கவுதம் கவனித்தனர். தங்கையின் மொபைல் போனை ஆராய்ந்தனர். அதில் சந்தீப் மெசேஜ் அனுப்பியதும், அதற்கு தங்கை பதில் அனுப்பியதும் தெரிந்தது.
இதனால் கோபமடைந்த அண்ணன்கள், ஜிம் டிரெய்னர் சந்தீப், தங்கள் தங்கையின் மொபைல் போனை, 'ஹேக்' செய்ததாக குற்றம்சாட்டி, நேற்று காலை கூட்டாளிகளுடன் உடற்பயிற்சி மையத்தில் நுழைந்து, சந்தீப்பை கண்மூடித்தனமாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவரை தாக்கியது தொடர்பாக, அருண், கவுதம் உட்பட ஐவர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.