sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஜிம் பயிற்சியாளரின் லீலைகள்: புகைப்படங்களால் பரபரப்பு

 ஜிம் பயிற்சியாளரின் லீலைகள்: புகைப்படங்களால் பரபரப்பு

 ஜிம் பயிற்சியாளரின் லீலைகள்: புகைப்படங்களால் பரபரப்பு


ADDED : ஏப் 05, 2026 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2026 04:36 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹூப்பள்ளி: ஹிந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர், மேலும் பல ஹிந்து பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

ஹூப்பள்ளி மாவட்டம் விஜயநகரில் வசிப்பவர் சமீர், 24; அதே பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பணிபுரிகிறார். இவர் உடற்பயிற்சி கூடத்திற்கு வந்த விகாஸ் நகரை சேர்ந்த ஹிந்து இளம் பெண்ணுக்கு துாக்க மாத்திரை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தார்.

அதை வீடியோவாகவும் பதிவு செய்து, அவ்வப்போது அந்தப் பெண்ணை மிரட்டினார்.

இதுகுறித்து, அப்பெண் தன் பெற்றோரிடம் தெரிவித்தார். இவ்விஷயத்தை அறிந்த ஹிந்து அமைப்பினர் சமீருக்கு தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்து, வித்யா நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீர் பல பெண்களுடன் அரை நிர்வாணமாக இருக்கும் படங்கள் நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

சமீர் பல ஹிந்து பெண்களை குறிவைத்து, அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து உள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களை அவரின் சகோதரி தைசிம் முல்லாவே அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

ஹிந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். சமீர் தொடர்ச்சியாக, 'லவ் ஜிஹாத்' செய்து வருகிறார். அவரை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டார் கூறியதாவது:

என் பெண்ணிடம் சமீர் ஆசை வார்த்தைகள் கூறினார். அவரை சிறந்த மாடல் ஆக்குகிறேன் எனக்கூறி, தினமும் உடற்பயிற்சி கூடத்துக்கு வரவழைத்தார். என் மகளை பாலியல் வன்கொடுமைசெய்தார். கருக்கலைப்பு மாத்திரை உட்கொள்ளும்படி கூறி கட்டாயப்படுத்தினார். கருக்கலைப்பு மாத்திரையை உட்கொள்வது போன்று வீடியோ எடுத்து தனக்கு அனுப்பும்படி துன்புறுத்தினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்து, வீங்கிய முகத்துடன் சமீர் வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

என் மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை. அந்தரங்க வீடியோக்களை நான் எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணின் மொபைல் போனை சோதித்து பாருங்கள். என் மீது யாரும் தவறான கருத்துகளை பரப்ப வேண்டாம். இதில், யார் தவறு செய்தது என்பது விரைவில் தெரிய வரும். எங்கள் இருவரது மொபைல் போன்களையும் சோதித்து பாருங்கள். பின்னர், யாருக்கு கள்ளத்தொடர்பு இருக்கும் என்பது தெரியவரும். இதை செய்தாலே உண்மை வெளியில் வரும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us