தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்று முதல் மூன்று நாட்கள் ஹம்பி உற்சவம்

 இன்று முதல் மூன்று நாட்கள் ஹம்பி உற்சவம்

 இன்று முதல் மூன்று நாட்கள் ஹம்பி உற்சவம்


ADDED : பிப் 13, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 13, 2026 05:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விஜயநகரா: விஜய நகர சாம்ராஜ்யத்தை நினைவூட்டும் ஹம்பி உற்சவம் இன்று துவங்குகிறது. இம்முறையும் லட்சக்கணக்கானோர் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, விஜயநகரா மாவட்ட நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

விஜயநகரா மாவட்டம் ஹொஸ்பேட் தாலுகாவின், உலக பிரசித்தி பெற்ற ஹம்பியில், இன்று முதல் வரும், 15ம் தேதி வரை ஹம்பி உற்சவம் நடைபெற உள்ளது. நடிகர் சிவராஜ்குமார் இம்முறை உற்சவத்துக்கு வருகை தருகிறார். இன்று மாலை ஹம்பி உற்சவத்தை, முதல்வர் சித்தராமையா துவங்கி வைக்கிறார்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஹம்பி உற்சவத்துக்கு மக்களை அழைத்து வர, 20 இலவச பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உற்சவத்தை முன்னி ட்டு இசை, நடனம் உட்பட பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. வரும், நாளை மற்றும் நாளை மறுநாள் தேதிகளில் விஜயநகரா தொடர்பான கருத்தரங்கு நடக்கும். நிகழ்ச்சி நடத்த ஹம்பியின் ஐந்து இடங்களில், பிரம்மாண்ட மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்தாண்டு உற்சவத்தின் போது, லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். இம்முறையும் மக்கள் பெருமளவில் உற்சவத்தில் பங்கேற்பர் என, எதிர்பார்க்கிறோம். அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us