ADDED : ஜூலை 21, 2026 02:53 AM

- நமது நிருபர் -:
உத்தர கன்னடா மாவட்டம், சன்னபட்டணா தாலுகாவில் அமைந்துள்ளது, 16ம் நுாற்றாண்டை சேர்ந்த சன்னபட்டணா ஹனுமன் கோவில்.
காலப்போக்கில் கோவில் இல்லாமல் போனது. 150 ஆண்டுகளுக்கு முன் இவ்வழியாக துறவி ஒருவர் சென்றார்.
இரவு உறங்கும் போது அவருக்கு வந்த கனவில், அத்துறவி கிணற்றில் இருப்பதாக தோன்றியது. விழித்ததும், அந்த கிணறை தேடி கண்டுபிடித்தார். அப்போது, வறண்ட கிணற்றில் ஹனுமனின் சிலை இருந்தது.
கிராம மக்கள் ஹனுமன் சிலை மேலே எடுக்கப்பட்டது. பாழடைந்த கோவில், கிராம மக்களின் ஒத்துழைப்புடன் கட்டப்பட்டது. அப்போது, பட்கல்லை ஆண்ட ராணி சன்னபைரா, கோவிலுக்காக நிலங்களை தானமாக வழங்கினார். ஹனுமன் சிலையில் கூம்பு வடிவ சக்கர சின்னம் பொறிக்கப்பட்டு உள்ளது. தெற்கு நோக்கிய முகம், இடுப்பில் கத்தி, வாலில் மணியுடன் காட்சி அளிக்கிறார்.
இங்கு ஆண்டுதோறும் ஒன்பது நாள் பிரம்மோத்சவம் நடக்கும். ஒன்பது நாட்களும் ஒவ்வொரு ரதத்தில் ஹனுமன் பவனி வருவார்.
அதுபோன்று ஹனுமன் ஜெயந்தி, விஜயதசமி, கார்த்திகை மாத வனபோஜன உத்சவம், ரதசப்தமி, வர்தந்தி திருவிழாவும் கோலாகலமாக நடக்கிறது.
சனிக்கிழமை தோறும், ஏகாதசி ருத்ரபஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்படுகிறது. மேலும் பக்தர்களே மங்களாரத்தி நிகழ்த்துவர். ஒவ்வொரு கன்னட ஷிராவண மாதத்தில், பக்தர்கள் மலர் பூஜையும், சொற்பொழிவும் நிகழ்த்துவர்.
எட்டு திசைகள் இக்கோவிலை சுற்றி கிழக்கில் வீர மாருதி, தென்கிழக்கில் கஸ்மூதி ஹனுமன், தெற்கில் கராடி ஹனுமன், தென்மேற்கில் தொட்டகந்த ஹனுமன், மேற்கில் தத்தபகில ஹனுமன், வடமேற்கில் காளி ஹனுமன், வடக்கில் கோட்டை ஹனுமன், வடகிழக்கில் மங்குளி ஹனுமன் என எட்டு திசைகளிலும் ஹனுமன் கோவில்கள் இருப்பது சிறப்பு.
முன்னர் வெள்ளம், நோய்கள் போன்ற இடர்பாடுகளை சந்தித்த மக்கள், இப்பகுதியை பாதுகாக்க, எட்டு திசைகளிலும் ஹனுமன் கோவிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.
எப்படி செல்வது?
l ரயிலில் செல்வோர், பட்கல் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு பஸ், ஆட்டோவில் செல்லலாம்.
l பஸ்சில் செல்வோர், பட்கல் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 4 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு பஸ், ஆட்டோவில் செல்லலாம்.
