தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அரசு பஸ்சில் பெண்கள் அடிதடி

 அரசு பஸ்சில் பெண்கள் அடிதடி

 அரசு பஸ்சில் பெண்கள் அடிதடி

1


ADDED : ஜூலை 19, 2026 11:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2026 11:31 PM

1


1
Follow on Google
அ நிறம் | அளவு

ஹாசன்: கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் இருக்கைக்காக, பெண்கள் அடிதடியில் ஈடுபட்டனர். பெண் நடத்துநரையும் தாக்கினர்.

கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் ஒன்று நேற்று முன்தினம் மாலையில், பேலுாரில் இருந்து, ஹாசனுக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சில் இருக்கைக்காக, சில பெண்கள் தகராறு செய்தனர்.

வாக்குவாதம் முற்றி கைகலப்பிலும் ஈடுபட்டதால், பஸ்சில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.

பஸ்சில் ஏறிய ஒரு பெண், மது அருந்தியிருந்தார். இருக்கைக்காக அவர் சண்டை போட்டு, மற்ற பயணியருக்கும் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

சண்டையை சமாதானம் செய்ய முயற்சித்த பெண் நடத்துநரை, அந்த பெண் பயணி தாக்கினார். பொறுமையிழந்த நடத்துநரும், அப்பெண்ணை பதிலுக்கு தாக்கினார். நடந்த சம்பவத்தை, பஸ்சில் இருந்த பெண், தன் மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us