/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆர்.எஸ்.எஸ்., பாடல் பாடியது சரியல்ல சிவகுமார் மீது ஹரிபிரசாத் அதிருப்தி
/
ஆர்.எஸ்.எஸ்., பாடல் பாடியது சரியல்ல சிவகுமார் மீது ஹரிபிரசாத் அதிருப்தி
ஆர்.எஸ்.எஸ்., பாடல் பாடியது சரியல்ல சிவகுமார் மீது ஹரிபிரசாத் அதிருப்தி
ஆர்.எஸ்.எஸ்., பாடல் பாடியது சரியல்ல சிவகுமார் மீது ஹரிபிரசாத் அதிருப்தி
ADDED : ஆக 26, 2025 02:54 AM

பெங்களூரு: ''மாநில காங்கிரஸ் தலைவராக இருந்து கொண்டு, ஆர்.எஸ்.எஸ்., பாடலை துணை முதல்வர் சிவகுமார் பாடியது தவறு,'' என காங்கிரஸ் மூத்த எம்.எல்.சி., ஹரிபிரசாத் அதிருப்தி தெரிவித்தார்.
பெங்களூரு சின்னச்சாமி விளையாட்டு அரங்கில், கூட்ட நெரிசலில் 11 பேர் பலியானது குறித்து, சில நாட்களுக்கு முன் சட்டசபையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காரசார விவாதம் நடந்து கொண்டிருந்தது.
சம்பவத்துக்கு காரணம் துணை முதல்வர் சிவகுமார் என, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
அப்போது அவர்களை அமைதிப்படுத்தும் வகையில், சிவகுமார் ஆர்.எஸ்.எஸ்.,சின், 'நமஸ்தே சதா வத்சலே மாத்ரு பூமி' என துவங்கி, சில வரிகளை பாடினார். சபை மவுனமானது; இது சர்ச்சைக்கு காரணமானது. ஆர்.எஸ்.எஸ்., பாடல் பாடியதை, பா.ஜ.,வினர் வரவேற்றனர். காங்கிரசார் அதிருப்தி தெரிவித்தனர்.
இது குறித்து, டில்லியில் ஹரிபிரசாத் நேற்று அளித்த பேட்டி:
துணை முதல்வராக இருந்து ஆர்.எஸ்.எஸ்., பாடலை பாடினால், அது தவறல்ல. ஆனால் மாநில காங்கிரஸ் தலைவராக, அவர் இப்பாடலை பாடியது சரியல்ல. ஏன் என்றால் அரசு என்பது, ஒரு கட்சியின் அரசல்ல. 7 கோடி கர்நாடக மக்களின் அரசாகும். இதில் ஆர்.எஸ்.எஸ்., சங்கத்தினரும் உள்ளனர்.
காந்தியை கொன்ற சங்கம் அது. அந்த சங்கத்தின் பிரார்த்தனை பாடலை, சிவகுமார் மாநில தலைவராக பாடியிருந்தால், மன்னிப்பு கேட்க வேண்டும்.
சிவகுமாருக்கு பல முகங்கள் உள்ளன. விவசாயி என, கூறிக்கொள்கிறார்; மற்றொரு முறை குவாரி உரிமையாளர்; கல்வி நிறுவனங்களின் உரிமையாளர் என, கூறுகிறார்.
எனவே அவர் யாரிடம் என்ன சொல்ல வேண்டும் என்பதை, கவனத்தில் கொண்டுள்ளாரா என்பது தெரியவில்லை. யாரை மகிழ்விக்க அப்படி செய்தார் என்பது தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.