தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஓராண்டில் 1,691 கிலோ உற்பத்தி ஹட்டி தங்கச்சுரங்கம் சாதனை

 ஓராண்டில் 1,691 கிலோ உற்பத்தி ஹட்டி தங்கச்சுரங்கம் சாதனை

 ஓராண்டில் 1,691 கிலோ உற்பத்தி ஹட்டி தங்கச்சுரங்கம் சாதனை


ADDED : மே 17, 2026 11:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2026 11:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராய்ச்சூர்: நாட்டில் பிரசித்தி பெற்ற அரசு சார்ந்த ஹட்டி தங்கச்சுரங்கம், 1,691.50 கிலோ தங்கம் உற்பத்தி செய்து, சாதனை படைத்துள்ளது.

இது தொடர்பாக, சுரங்க அதிகாரிகள் கூறியதாவது:

கோலார், தங்கவயலில் தங்கச்சுரங்கம் மூடிய பின், இந்தியாவில் வர்த்தக அளவில் தங்கம் உற்பத்தி செய்யும், அரசு சார்ந்த தங்கச்சுரங்கம் என்ற பெருமை, ஹட்டிக்கு கிடைத்துள்ளது.

ராய்ச்சூர் மாவட்டம், லிங்கசகூரு தாலுகாவில் ஹட்டி தங்கச்சுரங்கம் உள்ளது. இங்கு ஆண்டுக்கு ஆண்டு, தங்க உற்பத்தி அதிகரிக்கிறது. 2025 - 26ல், 1,700 கிலோ தங்கம் உற்பத்தி செய்ய, கர்நாடக அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. இதில் 1,691.50 கிலோ தங்கம் உற்பத்தி செய்து, ஹட்டி சுரங்கம் சாதனை படைத்துள்ளது. 99.50 சதவீதம் இலக்கை எட்டியுள்ளது.

இப்போது முதன் முறையாக, ஹட்டி தங்கச்சுரங்கத்தில், 1,910 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்தது. இந்த வர்த்தகத்தால், சுரங்க நிறுவனத்துக்கு 844 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. கடந்தாண்டு 436 கோடி ரூபாய் வருவாய் கிடைத்திருந்தது. இம்முறை லாபம் அதிகரித்துள்ளது.

சர்வதேச அளவில், தங்கம் விலை ஏறுமுகமாக உள்ளது. இந்த நிலையில் ஹட்டி சுரங்கத்தில், தங்க உற்பத்தி அதிகரிப்பதால், மாநில அரசுக்கு பொருளாதார பலம் கிடைத்துள்ளது. தங்க உற்பத்தி அதிகரிப்பதன் பயனாக, அரசுக்கு செலுத்தும் ராயல்டி மற்றம் லாபத்தின் அளவு, கணிசமாக அதிகரித்துள்ளது.

சமீப நாட்களாக ஹட்டி தங்கச்சுரங்கத்தில், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் தங்க உற்பத்தி அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us