/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசியல்வாதிகளுடன் உல்லாசமாக இரு;: மனைவியை மிரட்டிய கணவர் மீது வழக்கு
/
அரசியல்வாதிகளுடன் உல்லாசமாக இரு;: மனைவியை மிரட்டிய கணவர் மீது வழக்கு
அரசியல்வாதிகளுடன் உல்லாசமாக இரு;: மனைவியை மிரட்டிய கணவர் மீது வழக்கு
அரசியல்வாதிகளுடன் உல்லாசமாக இரு;: மனைவியை மிரட்டிய கணவர் மீது வழக்கு
ADDED : ஜூலை 02, 2025 09:21 AM

பனசங்கரி; அரசியல்வாதிகளுடன் உல்லாசமாக இருக்கும்படி, மனைவிக்கு தொல்லை கொடுத்ததுடன், கருக்கலைப்பு செய்த கணவர், அவரது பெற்றோர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.
பெங்களூரு, பனசங்கரி போலீஸ் நிலையத்தில் ஹலிமா, 26, என்பவர் நேற்று அளித்த புகார்:
எனக்கும், பனசங்கரியின் சிந்த் பாஷா - பஹீன் தாஜ் தம்பதி மகனான யூனுஸ் பாஷா, 30, என்பவருக்கும், 2021 ஜூன் 25ம் தேதி திருமணம் நடந்தது. திருமணமான நான்கு மாதங்கள், என்னுடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினார்.
விபசார புரோக்கர்
ஒரு நாள் யூனுஸ் பாஷா மொபைலை எடுத்து பார்த்தபோது, அதில் நிறைய பெண்களின் புகைப்படங்கள் இருந்தன.
வாட்ஸாப் மூலம் சிலரிடம் பேசியதையும் பார்த்தேன். அவர் விபசார புரோக்கர் என்பது தெரிந்தது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது என்னை மிரட்டினார்.
'பெயருக்கு தான், உன்னை மனைவியாக வைத்துள்ளேன். எனக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு உள்ளது' என்று கூறினார். இதுதொடர்பாக எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதற்கிடையில், மாமியார் பஹீன் தாஜ் வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்தினார். திருமணமான ஆறு மாதங்களில் கருவுற்றேன். கருவை கலைக்கும்படி என்னை யூனுஸ் பாஷா கட்டாயப்படுத்தினார். அதற்கு மறுத்ததால் என்னை வயிற்றில் எட்டி மிதித்ததில் கரு கலைந்தது.
ஏதாவது கேள்வி கேட்டால், துப்பாக்கியை தலையில் வைத்து, கொன்று விடுவதாக மிரட்டினார்.
தொல்லை
மாமியார், மாமனார் செய்த கொடுமையை பொறுத்துக் கொண்டேன். நான்கு மாதங்களுக்கு முன்பு, யூனுஸ் பாஷா மொபைல் போனை பார்த்தபோது, என் புகைப்படத்தை ஒருவருக்கு அனுப்பி, என்னை விற்பனை செய்ய 'டீல்' பேசியது தெரிந்தது.
இதுபற்றி அவரிடம் கேட்டபோது, 'அரசியல்வாதிகளுடன் நீ உல்லாசமாக இருக்க வேண்டும்' என்று என்னை மிரட்டி, தொல்லை கொடுத்தார். இதனால் அவரிடம் இருந்து தப்பி பெற்றோர் வீட்டிற்குச் சென்றேன்.
கடந்த மாதம் 4ம் தேதி யூனுஸ் பாஷா வீட்டில் இருந்த என் துணிகளை எடுக்க சென்றபோது, எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். ஆறு முறை எனக்கு முத்தலாக் கொடுத்தார். என்னை கொடுமைப்படுத்திய யூனுஸ் பாஷா, அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டு உள்ளது.
புகாரின்படி, மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.