/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கன்னடம் கட்டாயம் எதிர்த்த வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
/
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கன்னடம் கட்டாயம் எதிர்த்த வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கன்னடம் கட்டாயம் எதிர்த்த வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் கன்னடம் கட்டாயம் எதிர்த்த வழக்கில் அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
ADDED : ஜூலை 12, 2025 11:00 PM
பெங்களூரு: சி.பி.எஸ்.இ., - சி.ஐ.எஸ்.சி.இ., பள்ளிகளில் கன்னட மொழி கட்டாயம் என்ற உத்தரவை எதிர்த்த வழக்கில், மூன்று வாரங்களில் பதிலளிக்கும்படி, மாநில அரசுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
'கர்நாடக மொழி கற்றல் சட்டம், விதிகள் மற்றும் கட்டாய கடித விதிகளின்படி, மாநிலத்தில் உள்ள சி.பி.எஸ்.இ., - சி.ஐ.எஸ்.சி.இ., அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் கன்னடத்தை முதல் அல்லது இரண்டாவது மொழியாக கற்பிக்க வேண்டும்' என்று 2023ல் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து, சி.பி.எஸ்.சி., - சி.ஐ.எஸ்.சி.இ., அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் சிலர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மனுவில் குறிப்பிட்டு உள்ளதாவது:
கர்நாடக மொழி கற்றல் சட்டம், விதிகள் மற்றும் கட்டாய கடித விதிகள்படி, மாநிலத்தில் உள்ள சி.பி.எஸ்.சி., - சி.ஐ.எஸ்.சி.இ., இணைப்பு பள்ளிகள், கன்னடத்தை முதல் அல்லது இரண்டாம் மொழியாக கற்பிக்க வேண்டும் என்று அரசு கூறி உள்ளது.
அரசின் இந்த உத்தரவு, மாணவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். கர்நாடகாவில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் முதல், இரண்டாம், மூன்றாம் மொழிகளை கற்கும் உரிமையில், இச்சட்டம் தலையிடுவதாகும்.
இது குழந்தைகளின் கல்வி வாழ்க்கையை பாதிக்கும். அவர்களின் எதிர்கால வேலை வாய்ப்பை தடுக்கும். கன்னடம் அல்லாத பிற பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இது பிரச்னையாக இருக்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.
இம்மனு, பொறுப்பு தலைமை நீதிபதி காமேஸ்வர ராவ், நீதிபதி ஜோஷி அடங்கிய இரு அமர்வு முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் தரப்பு வக்கீல் ஆதித்யா சோந்தி வாதிடுகையில், ''மாநில அரசு, இரண்டு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
''எனவே, அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்,'' என்றார்.
இதற்கு நீதிபதிகள், 'இரண்டு ஆண்டுகளாக எதுவும் செய்யாத அரசு, விழித்து கொள்ள வேண்டும். இல்லையெனில், மனுதாரர்களுக்கு ஆதரவான முடிவெடுக்க நேரிடும். எனவே, மூன்று வாரங்களுக்குள் அரசு பதிலளிக்க வேண்டும்' என்று கூறி ஒத்திவைத்தனர்.