/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாணவியருக்கு ஆபாச 'மெசேஜ்'; தலைமை ஆசிரியருக்கு தர்ம அடி
/
மாணவியருக்கு ஆபாச 'மெசேஜ்'; தலைமை ஆசிரியருக்கு தர்ம அடி
மாணவியருக்கு ஆபாச 'மெசேஜ்'; தலைமை ஆசிரியருக்கு தர்ம அடி
மாணவியருக்கு ஆபாச 'மெசேஜ்'; தலைமை ஆசிரியருக்கு தர்ம அடி
ADDED : டிச 15, 2025 06:04 AM
பெலகாவி: மாணவியரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மகளிர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரை கிராமத்தினர் அடித்து, துவைத்தனர்.
பெலகாவி நகரின் பெளகுந்தி கிராமத்தில் உள்ள அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கல்லப்பா பெலகாவ்கர், 45. இவர் இப்பள்ளியின் சில மாணவியரிடம் தகாத முறையில் நடந்து கொண்டார். இவர்களின் மொபைல் போனுக்கு, ஆபாச மெசேஜ் அனுப்பினார்.
சில நாட்கள் பொறுமையாக இருந்த மாணவியர், கல்லப்பா பெலகாவ்கரின் தொந்தரவு அதிகரித்ததால், பெற்றோரிடம் கூறினர். கோபமடைந்த பெற்றோர், மூன்று நாட்களுக்கு முன் பெலகாவி நகர் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தனர். போதுமான சாட்சி, ஆதாரங்கள் இருந்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அரசியல் நெருக்கடிக்கு பணிந்ததாக கிராமத்தினர் குற்றம்சாட்டினர்.
இந்நிலையில் நேற்று முன் தினம், பள்ளியில் நுழைந்த கிராமத்தினர், தலைமை ஆசிரியர் கல்லப்பா பெலகாவ்கரை, அடித்து பின்னியெடுத்து போலீஸ் நிலையத்துக்கு இழுத்து சென்று ஒப்படைத்தனர். அதன்பின் போலீசார் வழக்கு செய்து, விசாரணையை துவக்கினர்.
பெலகாவி நகர போலீஸ் கமிஷனர் பூஷண் போரசே கூறியதாவது:
மூன்று நாட்களுக்கு முன், மாணவியரிடம் தலைமை ஆசிரியர் தகாத முறையில், நடந்து கொள்வதாக மாணவியரின் பெற்றோர், போலீஸ் நிலையத்தில் தகவல் கூறினார்களே தவிர, அதிகாரப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை. அவர்கள் புகார் அளிக்காததால், நாங்களே சுயமாக வழக்கு பதிவு செய்து கொண்டோம்.
புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது, பொய்யான குற்றச்சாட்டு. மாணவியரின் பெற்றோர் முறைப்படி, புகார் அளிப்பதற்காக காத்திருந்தோம். அளிக்காததால் நாங்களே வழக்கு பதிவு செய்து, விசாரணையை துவக்கினோம். இவ்வாறு அவர் கூறினார்.

