/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பரை தாக்கிய கணவர் கைது
/
மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பரை தாக்கிய கணவர் கைது
மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பரை தாக்கிய கணவர் கைது
மனைவியுடன் உல்லாசமாக இருந்த நண்பரை தாக்கிய கணவர் கைது
ADDED : டிச 15, 2025 06:05 AM
ஷிவமொக்கா: தன் மனைவி மீது, கண் வைத்த நண்பரை கணவர் கோபமடைந்து, கண் மூடித்தனமாக தாக்கியதில் நண்பர் காயமடைந்தார்.
ஷிவமொக்கா நகரின் பன்னிகெரே கிராமத்தில் வசிப்பவர் சிவு, 28. இவரது நண்பர் ஹரிஷ் நாயக், 28. இவர்கள் பல ஆண்டுகளாக நெருக்கமான நண்பர்களாக உள்ளனர். ஒரே தட்டில் உணவருந்துவர்.
சிவுவுக்கு திருமணமாகி மனைவி உள்ளார். அவ்வப்போது நண்பர் சிவுவின் வீட்டுக்கு வந்த போது, இவரது மனைவியுடன் அறிமுகம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் சந்தித்து, உல்லாசமாக இருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலையில், மதுபான பார்ட்டி நடத்துவதற்காக, நண்பர் ஹரிஷ் நாயக்கை, தன் வீட்டுக்கு சிவு அழைத்து வந்தார். மதுபானத்துக்கு சைட் டிஷ் வாங்கி வர, சிவு வெளியே சென்றார். இந்த வேளையில், அவரது மனைவியும், ஹரிஷ் நாயக்கும் உல்லாசமாக இருந்தனர். சிறிது நேரத்துக்கு பின், சிவு வீட்டுக்கு வந்தார். அப்போது, இருவரும் உல்லாசமாக இருந்ததை பார்த்து ஆக்ரோஷம் அடைந்தார்.
வீட்டில் இருந்த அரிவாளால், ஹரிஷ் நாயக்கின் தலையில் ஓங்கி அடித்தார். பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதியினர் ஷிவமொக்காவின், மெக்கான் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் கோமாவில் உள்ளார். சிவுவை ஷிவமொக்கா போலீசார், கைது செய்துள்ளனர்.

