/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நோய் பரப்பும் கொசுக்கள் சுகாதாரத்துறை நடவடிக்கை
/
நோய் பரப்பும் கொசுக்கள் சுகாதாரத்துறை நடவடிக்கை
ADDED : ஜூலை 12, 2025 10:55 PM
பெங்களூரு: கர்நாடகாவில் அதிகரிக்கும் டெங்கு, சிக்குன் குனியாவை கட்டுப்படுத்த, சுகாதாரத்துறை திட்டம் வகுத்துள்ளது. நோய்களுக்கு காரணமாகும் 'லார்வா'க்களை நீரிலேயே அழிக்க 1,500 தன்னார்வலர்களை நியமிக்க தயாராகி வருகிறது.
இது தொடர்பாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாநிலத்தில் டெங்கு, சிக்குன் குனியா நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இவற்றை கட்டுப்படுத்த, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளது. நோய்கள் பரவ காரணமாகும் 'லார்வா'க்களை, நீரிலேயே அழிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 1,500 தன்னார்வ சேவகர்களை நியமித்து, அவர்களுக்கு தினமும் 400 ரூபாய் ஊதியம் வழங்குவது உட்பட கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கைக்காக, 7.25 கோடி ரூபாய் செலவிடும் கோரிக்கைக்கு, சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
மாவட்டத்துக்கு ஒருவர் வீதம், 'இன்செக்ட் கலெக்டர்' நியமிக்கப்படுவர். இவர்கள் பல்வேறு பகுதிகளில் கொசுக்கள் போன்ற பூச்சிகளை சேகரித்து, ஆய்வுக்கு உட்படுத்துவர். இப்பூச்சிகளால் நோய்கள் பரவுகின்றனவா என்பதை கண்டறிவர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

