UPDATED : அக் 31, 2026 12:00 AM
ADDED : அக் 30, 2026 10:54 PM
பெங்களூரு: குடிநீர் வினியோக மையங்களை, சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர். விதிகளை மீறிய 24 மையங்களுக்கு, நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் காதர் அளித்த பேட்டி:
பேக்கிங் குடிநீர் தயாரிப்பு மையங்களில், குடிநீர் தரம் பற்றி தெரிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர் நாடகாவின் பல்வேறு இடங்களில், குடிநீர் தயாரிப்பு மையங்களில் சுகாதார அதிகாரிகள் சோதனை நடத்தினர். குடிநீரின் மாதிரிகளை சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஆய்வின் போது சில மையங்களில் துாய்மை இல்லாமல் இருந்தது. தொழி லாளர்கள் மருத்துவ சான்றிதழ் வைத்திருக்கவில்லை. முறைப்படி லைசென்ஸ் பெறாமல் குடிநீர் தயாரிப் பதும் தெரிந்தது.
குடிநீர் தரத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழும் இல்லை. லேபிள் ஒட்டுவதிலும் குளறுபடி நடந்துள்ளது. இத்தகைய 24 குடிநீர் மையங்களுக்கு, நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
மைசூரு, தாவணகெரேவில் உள்ள, குடிநீர் மையங்கள் தவறான தகவல் பதிவு செய்து, விற்கப்பட்ட குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோலார் மாவட்டத்தின், முல்பாகலில் உள்ள ஒரு மையம், அசுத்தமாக இருந்ததால் பூட்டு போடப்பட்டது. ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்ட குடிநீர் மாதிரிகளின் ஆய்வறிக்கைக்காக காத்திருக்கிறோம்.
குடிநீர் விஷயத்தில், சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. தவறு செய்தால் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்கள் குடிநீர் பாட்டில் வாங்கும் போது, லைசென்ஸ் எண், ஐ.எஸ்.ஐ., அடையாளம், தயாரான தேதியை பரி சீலிக்க வேண்டும். சந்தேகம் இருந்தால், சுகாதாரத்துறையிடம் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
