/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கொரோனா, டெங்கு பரவல் அதிகரிப்பு சுகாதார துறை அதிகாரிகள் எச்சரிக்கை
/
கொரோனா, டெங்கு பரவல் அதிகரிப்பு சுகாதார துறை அதிகாரிகள் எச்சரிக்கை
கொரோனா, டெங்கு பரவல் அதிகரிப்பு சுகாதார துறை அதிகாரிகள் எச்சரிக்கை
கொரோனா, டெங்கு பரவல் அதிகரிப்பு சுகாதார துறை அதிகாரிகள் எச்சரிக்கை
ADDED : மே 30, 2025 06:27 AM
பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனாவுடன் டெங்குவும் அதிகரிப்பதால், மாநில அரசு கவலை அடைந்துள்ளது. நோயை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
கர்நாடகாவில், குறிப்பாக பெங்களூரில் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது. ஒரே வாரத்தில் 200க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானது.
இதனால் சுகாதாரத்துறை உஷாராகியுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும், தேவையான மருந்துகள், படுக்கைகள், ஆக்சிஜன் உட்பட அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என, அரசு மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மற்றொரு பக்கம் முதல்வர் சித்தராமையாவும், அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி, உத்தரவுகள் பிறப்பித்தார். ஆனால் கொரோனா பரவல் தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.
இதற்கிடையே டெங்கு, சிக்குன்குனியா அதிகரித்து வருவது, அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு உட்பட மாநிலம் முழுதும் பரவலாக மழை பெய்து வருகிறது. தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளன. இது நோய்கள் பரவ காரணமாகிறது.
மழைக்காலம் துவங்கியதால், டெங்கு, சிக்குன் குனியாவுடன், கொரோனா தொற்றும் அதிகரிக்கிறது. பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். அலட்சியமாக இருந்தால் நோய் தீவிரமடையும் அபாயம் உள்ளது என, சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
மக்கள், தங்களின் ஆரோக்கியத்தில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக டாக்டரிடம் சென்று, பரிசோதித்து சிகிச்சை பெற வேண்டும் என, அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை:
மாநிலத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இன்று (நேற்று) 42 பேருக்கு கொரோனா உறுதியானது.
இத்துடன் நோயாளிகள் எண்ணிக்கை, 253 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு நேற்று ஒருவர் பலியானார். நடப்பாண்டு ஜனவரி முதல் இதுவரை இருவர் கொரோனாவால் இறந்தனர். 103 பேர் குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மன்னிப்பு கேட்கணும்
கன்னடம், தமிழ் மொழியில் இருந்து உருவானதாக கூறி நடிகர் கமல்ஹாசன் தேவையற்ற விவாதத்தை உருவாக்கி உள்ளார். மொழிகளுக்கு இடையே பாரபட்சத்தை ஏற்படுத்தி உள்ளார்.
தமிழ், கன்னடம் இரண்டும் சம காலத்து மொழிகளாகும். தனது மொழி சிறப்பானது என கூறி, வேறு மொழிகளை மட்டமாக பார்ப்பது சரியல்ல. இதை சகிக்க முடியவில்லை. அவர் தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்; கேட்பார் என, கருதுகிறேன்.
நமது மொழி மீது, நமக்கு பற்று உள்ளது. கன்னட மொழிக்கு தன்னுடையதேயான வரலாறு உள்ளது. கன்னட இலக்கியத்துக்கு மிக அதிகமான ஞானபீட விருதுகள் வந்துள்ளன.
- யோகேஸ்வர்,
காங்., - எம்.எல்.ஏ., சென்னபட்டணா