/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆரோக்கியத்தை அளிக்கும் முட்டை இட்லி
/
ஆரோக்கியத்தை அளிக்கும் முட்டை இட்லி
ADDED : ஆக 22, 2025 11:21 PM

இட்லி பலருக்கும் பிடித்தமான உணவு. எளிதில் ஜீரணமாகும் என்பதால், சிறு குழந்தைகள், வயதானவர்களுக்கு இட்லியே சிறந்த உணவு. ரவா இட்லி, தட்டு இட்லி என, பல விதமான இட்லிகள் உள்ளன. முட்டை இட்லி கேள்விப்பட்டுள்ளீர்களா? இது மாறுபட்ட சுவையில் இருக்கும்.
செய்முறை முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, முட்டையை உடைத்து ஊற்றவும். அதில் மிளகு துாள், உப்பு, மஞ்சள் துாள் சேர்த்து கிளறவும். சிறிதாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி தழை, கறிவேப்பிலை, துருவிய பன்னீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இட்லி தட்டில் வெண்ணெய் தடவி, முட்டை கலவையை இட்லி வடிவில் வைக்கவும். இதன் மீது முந்திரி பருப்பு, பாதாம் வைத்து அழுத்தவும், இதை 10 நிமிடம் வேக வைத்தால், ஆரோக்கியமான முட்டை இட்லி தயார். இது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தாக இருக்கும். பள்ளிகளுக்கு செய்து கொடுத்து அனுப்பலாம். ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள்
- நமது நிருபர் - .