/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரன்யா ராவுக்காக ஆட்கொணர்வு மனு விசாரணை ஆக., 28க்கு ஒத்திவைப்பு
/
ரன்யா ராவுக்காக ஆட்கொணர்வு மனு விசாரணை ஆக., 28க்கு ஒத்திவைப்பு
ரன்யா ராவுக்காக ஆட்கொணர்வு மனு விசாரணை ஆக., 28க்கு ஒத்திவைப்பு
ரன்யா ராவுக்காக ஆட்கொணர்வு மனு விசாரணை ஆக., 28க்கு ஒத்திவைப்பு
ADDED : ஜூலை 24, 2025 06:44 AM

பெங்களூரு : நடிகை ரன்யா ராவின் தாய் தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் 28ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
துபாயில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வந்த வழக்கில், நடிகை ரன்யா ராவ் உட்பட மூன்று பேரை, டி.ஆர்.ஐ., எனும் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். மூவரும் சேர்ந்து 100 கிலோ தங்கத்தை கடத்தியதாக நீதிமன்றத்தில் டி.ஆர்.ஐ., அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜாமின் கிடைத்தால் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பு இருப்பதால், மத்திய அரசின் நிதித்துறைக்கு உட்பட்ட மத்திய பொருளாதார புலனாய்வு அமைப்பின் உத்தரவின்படி, மூவர் மீதும் 'காபிபோசா' எனும் அன்னிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில், ரன்யாராவின் வளர்ப்பு தாய் ரோகிணி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு, நீதிபதிகள் அனு சிவராமன், மன்மதராவ் முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது.
நேற்று நடந்த விசாரணையின்போது, ரோகிணி தரப்பு வக்கீல் கிரண் ஜவளி வாதிடுகையில், ''காபிபோசா சட்டத்தின் கீழ் ரன்யா ராவ் காவலில் எடுக்கப்பட்டதை, கர்நாடக உயர் நீதிமன்ற ஆலோசனை குழு உறுதிபடுத்தி உள்ளது. எனவே, ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க வேண்டும்,'' என்றார்.
டி.ஆர்.ஐ., சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசட்டர் ஜெனரல் அரவிந்த் காமத், ஆட்சேபனை தாக்கல் செய்ய அவகாசம் கோரினார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை, ஆக., 28ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.