/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மின் தடையை சீர்படுத்த மா.கம்யூ., கோரிக்கை
/
மின் தடையை சீர்படுத்த மா.கம்யூ., கோரிக்கை
ADDED : ஜூலை 24, 2025 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தங்கவயல் : தங்கவயலில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதை தவிர்க்கவும், மின் கம்பிகள் மீது படர்ந்துள்ள மரக்கிளைகள், இலைகளை அகற்றவும், இரும்பு மின் கம்பங்களை அகற்றி கான்கிரீட் மின் கம்பமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கக் கோரி, சாம்பியன் ரீப் பகுதியில் உள்ள தங்கவயல் பெஸ்காம் அலுவலக செயல்பொறியாளரிடம் மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்.
அக்கட்சியின் தங்கவயல் தாலுகா செயலர் பி. தங்கராஜ் தலைமையில் எஸ்.டி.ஆனந்தன், நிசான், அசோகன், தினேஷ், சந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.
***