ADDED : மே 08, 2026 01:00 AM
பெங்களூரு: கொலை வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து, முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீதான விசாரணையை, உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்து உள்ளது.
தார்வாட் டவுன் சப்தாபுராவில் கடந்த 2016 ல் நடந்த பா.ஜ., பிரமுகர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் வினய் குல்கர்னிக்கு ஆயுள் தண்டனை விதித்து, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். நேற்று நடந்த விசாரணையின் போது சி.பி.ஐ., சார்பில் ஆஜரான வக்கீல், மேல்முறையீடு மனு தொடர்பான ஆட்சேபனை மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டார். இதனால் மனு மீதான அடுத்த விசாரணையை இம்மாதம் 26 ம் தேதிக்கு, நீதிபதிகள் சச்சின் சங்கர் மகதுாம், ராஜேஷ் ராய் ஒத்தி வைத்தனர்.
